பேரதிர்ச்சி! உலகம் முழுவதும் முடங்கியது ட்விட்டர்!

0
58

இந்தியா உட்பட உலகின் பல்வேறு பகுதிகளில் டுவிட்டர் முடங்கியிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கின்றன.

ஃபேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், யூடியூப், உள்ளிட்ட சமூக வலைதளங்கள் உலக அளவில் பிரபலமான சமூக வலைதளங்கள் என்று பெயரெடுத்தவையாகும். இந்த வலைதளங்களின்றி வாழ்க்கையே இல்லை என்றே பலரும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

உணவு உண்ணும் சமயத்தில் கூட கைபேசியை கையில் வைத்துக்கொண்டு சமூக வலைதளங்களில் உலா வரும் பழக்கத்திற்கு பலரும் தற்சமயம் அடிமைகளாக இருக்கிறார்கள். இதன் காரணமாக, இது போன்ற சமூக வலைதளங்கள் ஒரு நாள் அல்லது சில மணி நேரங்கள் முடங்கிவிட்டாலும் பெரும் பாதிப்பை அது ஏற்படுத்திவிடுகிறது.

இந்த நிலையில், பிரபல சமூக வலைதளமான ட்விட்டரின் சேவைகள் இன்று முடங்கியிருக்கிறது. இதன் காரணமாக, அந்த செயலின் பயனர்கள் தங்களுடைய பதிவுகளை செய்வதிலும், தகவல்களை பார்ப்பதிலும், பல சிக்கல்களை எதிர்கொண்டிருக்கிறார்கள்.

இந்தநிலையில், இந்தியாவிலும் கூட பலருக்கு இந்த சமூக வலைதளம் முடங்கியிருப்பது தெரியவந்திருக்கிறது. இணைய பயன்பாட்டை கண்காணிக்கும் ஒரு அமைப்பு வெளியிட்டிருக்கும் தகவலின் அடிப்படையில் சுமார் 15000கும் மேற்பட்டோர் ட்விட்டர் முடங்கியிருப்பதாக புகார் தெரிவித்திருக்கிறார்கள். ஆனாலும் இந்த சேவை முடக்கத்திற்கான காரணம் தெளிவாக தெரியவில்லை என்று தெரிவித்திருக்கிறது.

சிலருக்கு தங்களுடைய சமூக வலை தளத்தின் முகப்பு பக்கம் வந்தாலும் ரீட்வீட் செய்தல், அல்லது பிறரின் பதிலை படிப்பது உள்ளிட்ட அடிப்படை அம்சங்களை பயன்படுத்த முடியவில்லை என்று தெரிவிக்கிறார்கள். இதற்கு சர்வர் பிரச்சனை காரணமாக இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது.