தூத்துக்குடி துறைமுகத்துக்கு வருகை தந்த மிகப்பெரிய கப்பல்! துறைமுக ஆணையர் உற்சாகம்!

0
78

தூத்துக்குடி துறைமுகத்தில் முதன்முறையாக 292 மீட்டர் நீளமும், 45.05 மீட்டர் அகலமும், கொண்ட கேப் ப்ரீஸ் என்ற கேப் வகை கப்பல் இன்று கையாளப்பட்டது என சொல்லப்படுகிறது.

தூத்துக்குடி துறைமுகத்தில் முதல் முறையாக 292 மீட்டர் நீளமும், 45.05 மீட்டர் அகலமும், கொண்ட 1,80,000 டன் கொள்ளளவு கொண்ட இந்த கப்பல் கையாளப்பட்டது.

11.4 மீட்டர் மிதவை ஆழமுடன் வந்த இந்த கப்பல் ஓமன் நாட்டிலுள்ள சலாலா துறைமுகத்திலிருந்து 92,300 டன் சுண்ணாம்புக்கல் மற்றும் ஜிப்சமுடன் தூத்துக்குடி துறைமுகத்தில் கப்பல் தளம் 9ல் கையாளப்பட்டது.

இந்த கப்பலில் Eastern bulk trading &shipping pvt limited நிறுவனத்திற்காக சுண்ணாம்புக்கல் மற்றும் ஜிப்சம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தூத்துக்குடி துறைமுக ஆணையத் தலைவர் ராமச்சந்திரன், தன்னுடைய அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,

இது போன்ற பெரிய வகை கப்பல்களை கையாள்வதன் மூலமாக சரக்கு போக்குவரத்து செலவுகளை குறைப்பது தான் உலக அளவில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வர்த்தகத்தில் மிக குறைந்த கட்டணத்தில் கையாள முடியும் என தெரிவித்திருக்கிறார்.

அதோடு இந்த குறிப்பிடத்தக்க சாதனை செய்வதற்கு உறுதுணையாக இருந்த கப்பல் முகவர்கள், சரக்குகளை கையாளும் முகவர்கள், நகரும் பளுதூக்கி மற்றும் கன்வேயர் இயக்குபவர்கள், துறைமுகத்தின் கடல் துறை மற்றும் போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் எல்லோருக்கும் தன்னுடைய நன்றியையும், பாராட்டுக்களையும், தெரிவித்தார்.

தூத்துக்குடி துறைமுகம் தற்போது பல்வேறு வகையான நிலக்கரி, சரக்கு பெட்டகங்கள், சுண்ணாம்புக்கல், ஜிப்சம், காற்றாலைகள், இயந்திர உதிரிபாகங்கள், உரங்கள் மற்றும் உணவு தானியங்களையும் கையாண்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதோடு குறைந்த கட்டணத்தில் நிறைவான சேவை, மிக சிறந்த உட்கட்டமைப்பு சிறந்த உள்நாட்டு இணைப்பு, திறன் வாய்ந்த துறைமுக உபயோகிப்பாளர்கள் மற்றும் பல்வேறு உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்களை செயல்படுத்தி வரும் தூத்துக்குடி துறைமுகமானது தென்னிந்தியாவின் மிகப்பெரிய விரும்பப்படும் துறைமுகமாக திகழ்ந்து வருகிறது.