இந்தியாவிற்கு எதிராக திரும்பும் துருக்கி

0
61

சமீபகாலமாக துருக்கி இந்தியாவிற்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துவருவதாக தெரிகிறது. பாகிஸ்தானும் துருக்கியும் நெருங்கிய கூட்டாளிகளாக மாறுகின்றன.

பாகிஸ்தானுக்கு வெடிமருந்துகள் மட்டுமல்லாது போர்க்கப்பல்களையும் கொடுத்து உதவுகிறது துருக்கி.

இப்போது துருக்கி ஊடகங்கள் இந்தியாவிற்கு எதிரான சொற்றொடர்களை பயன்படுத்த தொடங்கியிருக்கின்றன. “இந்திய ஆக்கிரமிப்பு ஜம்மு காஷ்மீர்” என்ற சொற்றொடர்தான் அது. இந்த சொற்றொடரை பாகிஸ்தான் ஊடகங்கள் தான் எப்போது பயன்படுத்தும்.

இந்த சொற்றொடரை முன்னமே ஒருமுறை  பாகிஸ்தான் அழுத்தத்தினால் துருக்கி அரசினால நடத்தப்படும் அனடோலு என்ற நீயுஸ் ஏஜென்ஸி பயன்படுத்திய போது இந்திய அதிகாரிகளால் முறையிடப்பட்டது.

தற்போது மீண்டும் இந்த சொற்றொடரை பயன்படுத்த தொடங்கியிருக்கிறது துருக்கிய ஊடகங்கள். பெரும்பான்மையான அரபு நாடுகள் காஷ்மீர் விவகாரம் இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையேயான இரு நாட்டு பிரச்சினை என்று ஒதுங்கியிருக்கும் போது துருக்கி மட்டும் பாகிஸ்தானுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துவருகிறது.

இதோடு நில்லாது இந்தியாவுக்கு எதிரான தீவிரவாத செயல்களுக்கு துருக்கி நிதி உதவி அளித்துவருவதாகவும் தெரிகிறது. குடியுரிமை திருத்தச் சட்டத்தை  எதிர்த்து நடந்த போராட்டங்களுக்கு நிதி உதவியையும் துருக்கி அளித்ததாகவும் கூறப்படுகிறது

இரண்டு மாதங்களுக்கு முன் துருக்கியிலிருந்து  youtub-ல் வெளிவந்த “my name is kashmir” என்ற ஒரு காணொளி பாடலில் “இனப்படுகொலை” “ “முடிவற்ற சித்ரவதை” போன்ற சொற்கள் காண்படுகின்றன.