பெண்கள் புறக்கணிக்கப்படுகிறார்களா…? கொந்தளிக்கும் மகளிர் சமூகம்…!

0
51

பீகார் மாநிலத்தில் வரும் 28 ஆம் தேதியன்று நடைபெறவிருக்கின்ற சட்டசபை தேர்தலில் 144 பெண்களுக்கு மட்டும்தான் அரசியல் கட்சிகள் தொகுதிகள் வழங்கியிருக்கிறார்கள் அதே நேரம் இந்த தேர்தலில் 922 ஆண்கள் வேட்பாளராக களம் காண இருக்கிறார்கள்.

பீகார் மாநிலத்தில் 243 சட்டசபை தொகுதிகள் உள்ளன ஆகவே பீகார் சட்டசபைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் தேர்தல் இந்த மாதம் 28ஆம் தேதி ஆரம்பித்து மூன்று கட்டங்களாக நடைபெற இருக்கின்றது வரும் 28ம் தேதியன்று முதல்கட்ட தேர்தலாக 71 சட்டசபை தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற இருக்கின்றது எனவே இந்த தொகுதிகளில் அரசியல் கட்சிகள் அனைத்தையும் சேர்த்து மொத்தமாக 1066 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

இந்த ஆயிரத்து 66 வேட்பாளர்களில் 922 பெயர் ஆண்கள் அதேநேரம் இந்த தேர்தலில் போட்டியிடும் பெண் வாக்காளர்கள் வெறும் 144 பேர் மட்டுமே இத்தனைக்கும் அந்த மாநிலத்தில் ஆண்களுக்கு சமமாக பெண் வாக்காளர்களும் இருக்கின்றார்கள் அந்த மாநிலத்தின் தேர்தல் சுயவிவரத்தை படி பீகாரில் மூன்று புள்ளி எட்டு கோடிக்கும் அதிகமான ஆண் வாக்காளர்கள் இருக்கிறார்கள் அதேநேரத்தில் 3.4 கோடிக்கும் அதிகமான பெண் வாக்காளர்களும் இருக்கிறார்கள்.

ஆண்களுக்கு சமமான பெண் வாக்காளர்கள் இருந்தாலும்கூட அந்த மாநிலத்தின் அரசியல் கட்சிகள் அனைத்தும் ஆண்களுக்கே அதிக முன்னுரிமை கொடுத்துள்ளார்கள் என்று சொல்லப்படுகிறது.