Connect with us

News

தமிழக அரசு எடுத்த முக்கிய முடிவு! கடும் கண்டனம் தெரிவித்த டிடிவி தினகரன்!

Published

on

தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் பதவியை ரத்து செய்துவிட்டு அவருக்கான அதிகாரத்தை பள்ளிக்கல்வித்துறையின் ஆணையரிடம் ஒப்படைப்பது குறித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஒரு ட்விட்டர் பதிவு வெளியிட்டிருக்கிறார்.

அதில் அவர் தெரிவித்திருப்பதாவது, பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் பதவியை ரத்து செய்து அதற்கான அதிகாரத்தை பள்ளிக்கல்வித் துறை ஆணையரிடம் ஒப்படைத்து விடலாம் என்ற தமிழக அரசின் முடிவுக்கு பல தரப்பிலிருந்தும் அதிருப்தி இருந்து வந்திருக்கிறது. அரசு நிர்வாகத்தில் காலத்திற்கு ஏற்றவாறு சீர்திருத்தங்களை செய்வது அவசியம் ஆனாலும் கூட அவற்றை எடுத்தோம், கவிழ்த்தோம், என்று செய்வது சரியானது கிடையாது. துறை சார்ந்த அதிகாரிகளிடம் ஆலோசனை செய்து அதன் பிறகு முறையாக முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார் டிடிவி தினகரன்.

Advertisement

 

 

Advertisement

அது போன்ற முடிவுகளை எடுத்து செயல்படுத்தும் சமயத்தில் இதற்கு முன்பு இருந்ததை விட நிர்வாக பணிகள் மிகவும் சிறப்பாக நடைபெற வேண்டுமே ஒழிய அந்த துறையில் இருப்பவர்களுக்கு அது எந்த விதத்திலும் பாதிப்பை ஏற்படுத்தி விடக்கூடாது. அவை இந்த பிரச்சனையில் தமிழக அரசு மிகவும் நிதானமாக செயல்பட்டு தகுந்த முடிவினை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்திருக்கிறார் டிடிவி தினகரன்.

Advertisement
Continue Reading
Advertisement