கூவத்தூரில் குடியைக் கெடுத்தவர் டிடிவி தினகரன்! அமைச்சர் சி.வி .சண்முகம் கடும் தாக்கு!

0
76

தமிழக சட்டசபைத் தேர்தல் விரைவில் வர இருக்கிறது. அதனை சந்திக்க தமிழக அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றனர் திமுக மற்றும் அதிமுக இடையே நேரடி போட்டி என்ற நிலை உருவாகி இருக்கிறது. இந்த நிலையில், இரண்டு கட்சியினரும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் தங்களை ஈடுபடுத்தி வருகிறார்கள். ஒருவர் மாற்றி ஒருவர் மிகக் கடுமையாக விமர்சனம் செய்து கொள்கிறார்கள். இதற்கு இடையில் நான்கு வருட காலம் சிறை தண்டனை முடிந்த நிலையில், சசிகலா சிறையில் இருந்து விடுதலையாகி தமிழகம் வந்திருப்பது தமிழக அரசியல் களத்தை மேலும் பரபரப்பாகி இருக்கிறது. இப்பொழுது ஒரே சமயத்தில் அதிமுக, திமுக மற்றும் அமமுக, என்று இரண்டு கட்சிகளையும் விமர்சனம் செய்யும் நிலைக்கு சென்றிருக்கிறது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், நேற்றையதினம் சமூகநலத் துறை சார்பாக பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தின் ஆரம்ப விழா விழுப்புரம் மாவட்டத்தில் நடந்த அந்த சமயத்தில் சுமார் 600 பேருக்கு மேல் 8 கிராம் தங்கம் மற்றும் திருமண நிதி உதவி போன்றவற்றை அமைச்சர் சிவி சண்முகம் பொதுமக்களுக்கு வழங்கினார். அதன் பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்த செய்தி சண்முகம் தெரிவித்ததாவது ஸ்டாலின் பச்சைத் துண்டு போட்டுக்கொண்டு விவசாயிகளை ஏமாற்றி திரிகின்றார். பச்சை துண்டு மட்டும் போட்டால் ஸ்டாலின் விவசாயி ஆகி விட இயலாது. விவசாயத்தை உண்மையிலேயே நன்கறிந்தவர் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தான். எவ்வளவு வேலை இருந்தாலும் கூட தன்னுடைய கிராமத்திற்கு இன்று வரையில் சென்று தன்னுடைய விவசாயத்தை கவனித்து வருகின்றார். இதனை பார்த்தாலே மக்களுக்கு உண்மையான விவசாயி யார் என்று தெரிந்து விடும் என்று தெரிவித்தார்.

ஸ்டாலின் அம்பானி வீட்டுக்குச் சொந்தக்காரர் போல இருக்கிறார். அதன் காரணமாக, அவருக்கு விவசாயம் தனக்கு எதுவுமே தெரியாது என்றும் தெரிவித்தார் தொலைபேசியில் டிடிவி தினகரன் மற்றும் சசிகலாவின் மிகக் கடுமையாக விமர்சனம் செய்து வழிபடுவது தலையில் ஊற்றிக் கொடுத்து கூத்தாடி குடியை கெடுத்தவர் டிடிவி தினகரன் என்றும் அவரிடம் இருந்து சசிகலா தப்பித்துக் கொள்ள வேண்டும். அதிமுக என்பது ஒன்றரை கோடி தொண்டர்களால் உருவாக்கப்பட்ட ஒரு குடும்பம் அந்த இயக்கம் எப்பொழுதும், எந்த சூழ்நிலையிலும், மறுபடியும் ஒரு குடும்பத்தின் கைகளில் சிக்கி விடாது என்று தெரிவித்தார்.