சீமான் தமது கருத்தை வாபஸ் பெற வேண்டும்!டிடிவி தினகரன் வலியுறுத்தல்

0
92

மதுரை: ராஜீவ் காந்தி விவகாரத்தில் பேசியதை சீமான் வாபஸ் பெற வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தி உள்ளார்.

என்ன நேரத்தில் சொன்னாரோ தெரியவில்லை. சீமானின் சர்ச்சை பேச்சு தான் இப்போது டிரெண்டிங்கில் உள்ளது. அவர் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் தமிழக தேர்தல் ஆணையமும் தயாராகி வருகிறது.

இந்த சூழ்நிலையில், அவ்வாறு பேசியதை சீமான் திரும்பபெற வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியிருக்கிறார். மதுரை வந்த அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போது இதனை கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:

மதுரையில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:துரோகம் செய்தவர்களுடன் நாங்கள் இணைய மாட்டோம்.

சிறையில் சசிகலா இருப்பதால், வெளியே இருப்பவர்கள் இஷ்டத்துக்கு பேசிக் கொண்டு இருக்கிறார்கள். மற்றவர்களை புண்படுத்தும் வகையில் சீமான் தேவையில்லாத கருத்துக்களை பேசக்கூடாது.

ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தவர். அவரது படுகொலை பற்றி பேசுவது சரியல்ல. இப்படி பேசி, தேவையில்லாத பிரச்சனையை கிளப்ப வேண்டிய அவசியம் இல்லை.

சீமான் பேசியதை திரும்ப பெற வேண்டும். அப்படி நடந்தால் அவருக்கும் நல்லது, என்னை போன்ற அரசியல்வாதிக்கும் நல்லது.எங்கள் கட்சிக்கு சின்னம் பெறும் விவகாரத்தில் விசாரணை நாளை டெல்லியில் நடக்கிறது.

ஆர்.கே.நகர் தேர்தலில் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டேன். விக்கிரவாண்டி, நாங்குநேரி, வேலூர் இடைத்தேர்தல்களில் ஒவ்வொரு சின்னத்திலும் போட்டியிட முடியாது. அப்படி செய்தால், மக்கள் குழம்பிவிடுவர். எனவே இடைத் தேர்தல்களில் பங்கேற்கவில்லை என்றார்.

மேலும் இதுபோன்ற தமிழ் செய்திகள், மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள், தொழில்நுட்ப செய்திகள், பொழுதுபோக்கு செய்திகள், சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் பேன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும், முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.

author avatar
Parthipan K