அதிமுகவிற்கும் டி.டி.வி தினகரனுக்கும் ரகசிய கூட்டா விலகியது மர்மம்!

0
64

டி.டி.வி. தினகரன் பாஜகவை மிக கடுமையாக எதிர்த்து வரும் காரணத்தால், சிறுபான்மையினரின் வாக்குகளை அதிகமாக பெறுவார் எனவும், அது திமுகவிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனவும், அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகிறார்கள்.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு மறுபடியும் குக்கர் சின்னம் கொடுக்கப்பட்டிருப்பது அந்த கட்சியினரை உற்சாகப்படுத்த இருக்கின்றது. குக்கர் சின்னத்தை அந்த கட்சியினர் வெற்றிச் சின்னம் என்பதை விட அதிர்ஷ்டமான சின்னமாகவே பார்க்கிறார்கள். ஏனென்றால் 2017ஆம் ஆண்டு நடந்த ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் டி.டி.வி தினகரன் இந்த சின்னத்தில் போட்டியிட்டு மிகப்பெரிய வெற்றி அடைந்தார் அதிமுக மற்றும் திமுக என இரு கட்சிகளுக்கும் சவால் விடும் வகையில் அந்த வெற்றி இருந்தது.

அதன்பின்னர் எடப்பாடி பழனிச்சாமி , பன்னீர்செல்வம் ஆகியோர் ஒன்றிணைந்து அதிமுகவை வழி நடத்தி வரும் நிலையில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இருந்து ஒரு சிலர் தாய் கழகமான அதிமுகவுக்கு சென்றுவிட்டார்கள். 2021 ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன்பாக அந்த கட்சி அதிமுக உடன் இணையும் என்று பரவலாக தகவல்கள் பரவியது இதன் காரணமாக ,கட்சியில் மிகப்பெரிய மந்தம் ஏற்பட்டது என்று தான் சொல்ல வேண்டும்.

இந்த நிலையிலே. குக்கர் சின்னத்தை மறுபடியும் பெற்று இருக்கும் காரணத்தால், அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தேர்தலில் தனியாக போட்டியிடும் என்று உறுதியாகி இருக்கின்றது. இதன் மூலமாக இனி கட்சியிலே எந்த ஒரு குழப்பமும் இருக்காது என்று சொல்கிறார்கள் .அதேநேரம் டி.டி.வி தினகரன் பாஜக, மற்றும் அதிமுகவை மிக மிகக் கடுமையாக விமர்சனம் செய்து வருவதால், தேர்தல் களத்தில் வேறு விதமான தாக்கங்களை ஏற்படுத்தும் நிலை ஏற்படும் என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகிறார்கள்.

சிறுபான்மையினரின் வாக்குவங்கி பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக இருக்கின்றது. அதேசமயம் அதிமுக பாஜகவுடன் கூட்டணியில் இருப்பதால், அதிமுகவும் சிறுபான்மையினர் வாழ்க்கை பெறப்போவதில்லை. அதனை திமுக மொத்தமாக கைப்பற்றி வந்தது ஆனாலும் இப்போது டி.டி.வி தினகரன் பாஜகவை மிகக் கடுமையாக எதிர்த்து வருவதால், சிறுபான்மையினர் ஓட்டுகளை கணிசமாக கைப்பற்றுவார் தினகரன் என்றும், அது திமுகவிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனவும், கருதி வருகிறார்கள். எனவே சிறுபான்மையினர் வாக்கு எப்போதும் திமுகவிற்கு சாதகமாக இருக்கும் அந்த வாக்குகளை திமுகவிற்கு செல்ல இயலாமல் தடுக்கும் விதமாக, டி.டி.வி தினகரன் அந்த வாக்குகளை பிரித்து தனக்கு சொந்தமாக்கிக் கொண்டு இருக்கின்றார். வாக்குகளை சிதைக்கும் காரணமாக, மறைமுகமாக அதிமுக வெற்றிக்கு வழிவகுக்கும் என்று தெரிவிக்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.