அதிமுகவுடன் டிடிவி தினகரன் கூட்டணி? உண்மையை போட்டு உடைத்த முன்னாள் முதல்வர்!!

0
85
அதிமுகவுடன் டிடிவி தினகரன் கூட்டணி? உண்மையை போட்டு உடைத்த முன்னாள் முதல்வர்!!
அதிமுகவுடன் டிடிவி தினகரன் கூட்டணி? உண்மையை போட்டு உடைத்த முன்னாள் முதல்வர்!!

அதிமுகவுடன் டிடிவி தினகரன் கூட்டணி? உண்மையை போட்டு உடைத்த முன்னாள் முதல்வர்!!

தற்பொழுது பெய்து வரும் பருவமழையால் மயிலாடுதுறை சீர்காழி உள்ளிட்ட இடங்கள் பெரும் அளவு பாதிப்படைந்துள்ளது. அங்குள்ள நெற்ப்பயிர்களும் இந்த பருவ மழையால் சேதம் அடைந்துள்ளது. இதனால் அங்குள்ள விவசாயிகள் பெருமளவு சோகத்தில் உள்ளனர். எப்பொழுதும் இல்லாத அளவிற்கு இம்முறை மழை பெய்ததால் பயிர்கள் நாசமானதை கருத்தில் கொண்டு தமிழக அரசும், நிவாரணம் வழங்கப்படும் என்று தெரிவித்தது.

ஆனால் ஒரு ஏக்கர் நிலத்திற்கு எவ்வளவு தொகை இழப்பீடாக வழங்கப் போகிறோம் என்பதை விரிவாக தெரிவிக்கவில்லை. அனைத்து கட்சிகளும் ஓர் ஏக்கருக்கு குறைந்தபட்சம் 30,000 ஆவது விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கடலூர் மாவட்டத்திற்கு சென்று பருவமழையால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்தார்.

அவர்களுக்கு தேவையான பொருள்களை வழங்கினார். அதனையடுத்து பயிர் சேதம் அடைந்த பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டார். மேலும் அங்குள்ள மக்களின் குறைகளை கேட்டறிந்தார். பின்பு அங்கிருந்த பத்திரிகையாளர்கள் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் பல கேள்விகளை எழுப்பினர். அவர்களுக்கு பதில் அளிக்கும் வகையில் அவர் கூறியது, அதிமுக ஆட்சியில் செயல்பட்டு வந்த திட்டங்கள் அனைத்தையும் திமுக முடக்கிவிட்டது.

அதேபோல தற்பொழுது சேதம் ஆகியுள்ள பயிர் நிலங்களை கணக்கிட்டு அதற்கு உகந்த இழப்பீட்டை வழங்க வேண்டும். மழையால் பாதிக்கப்பட்டு ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பகுதிகளை கவனித்து அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தற்பொழுது வரை திருவெண்காடு பகுதியானது மழையால் பெருமளவு பாதிப்படைந்துள்ளது. அம் மக்களைக் காண தற்பொழுது வரை எந்த ஒரு அதிகாரிகளும் செல்லவில்லை.

சீர்காழி மற்றும் தரங்கம்பாடி ஆகிய பகுதிகள் மழை நீரால் அதிக பாதிப்பை சந்தித்தது.அவர்களுக்கு ஆயிரம் வழங்கப்படும் என்று முதல்வர் கூறியிருந்தார். ஆனால் அங்குள்ள சேதத்திற்கு அங்குள்ள மக்களுக்கு  போதுமானதாக இருக்காது. குறைந்தபட்சம் அவர்களுக்கு 3000 ஆவது வழங்க வேண்டும். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு மக்கள் யாரும் நிம்மதியாகவே இல்லை, முதல்வர் மட்டும்தான் நிம்மதியாக உள்ளார்.

மேலும் பத்திரிக்கையாளர் ஒருவர் மெகா கூட்டணியில் டிடிவி தினகரன் இணைய போகிறாரா? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு அவர் கூறியதாவது, வரப்போகும் நாடாளுமன்றத் தேர்தலை அதிமுக மெகா கூட்டணியுடன் எதிர்கொள்ளும். ஆனால் ஒரு பொழுதும் தினகரன் உடன் அதிமுக கூட்டணி வைக்காது என்று திட்டவட்டமாக தெரிவித்தார். அதற்கு ஒரு சதவீதம் கூட வாய்ப்பில்லை என்று ஆணித்தனமாக கூறினார்.அப்பொழுது மெகா கூட்டணி யாருடன் இருக்கும் என பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.