விரைவில் திருப்பதி கோவிலில் தரிசனம்! – புதிய கட்டுபாடுகள் என்ன தெரியுமா?

0
72

கடந்த மார்ச் மாத இறுதியில் கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து மக்கள் கூடும் கோயில்கள், வழிபாட்டுத்தலங்கள், திரையரங்குகள், கடற்கரை, பூங்காக்கள், வணிக வளாகங்கள் அனைத்தும் மூடப்பட்டன.

கடந்த 120 ஆண்டுகளில் மூடப்படாத திருப்பதி, திருமலையில் உள்ள வேங்கடாசலபதி கோயிலுக்குள் நுழைய பக்தர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தற்போது 4வது ஊரடங்கு நடைமுறையிலுள்ள நிலையில் விரைவில் வழிபாட்டு தலங்களில் பக்தர்களை அனுமதிப்பதற்க்கான தளர்வை மத்திய மாநில அரசுகள் அறிவிக்கலாம் என்று கூறப்படுகிறது.

இதனையடுத்து அரசு தளர்வை அறிவித்தால் எவ்வாறு அதை கையாளலாம் என திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் ஆலோசனையை மேற்கொண்டு வருகிறது.

இதன் முதற்கட்டமாக ஏழுமலையான் சுவாமிக்கு நைவேத்தியமாக படைத்த லட்டு மற்றும் வடை பிரசாதங்களை திருப்பதியில் உள்ள பிரசாத மையத்தில் பக்தர்களுக்கு விற்பனை செய்யலாம் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்தது. இதனையடுத்து 500 லட்டு மற்றும் 500 வடை பிரசாதங்களை தேவஸ்தானம் நேற்று விற்பனை செய்தது.இதை அறிந்த பக்தர்கள் பிரசாத மையத்தில் திரண்டனர். அக்னி வெயிலையும் பொருட்படுத்தாமல் நீண்ட வரிசையில் நின்ற பக்தர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து நின்று பிரசாதத்தை வாங்கிச் சென்றனர். பலர் பிரசாதம் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

இதனை தொடர்ந்து கட்டுபாட்டு விதிகளுடன் தேவஸ்தானத்திற்க்கு சொந்தமான கோயில்களை திறக்க நிர்வாகம் ஆலோசித்து வருகிறது,

அதன்படி கீழ் கண்ட கட்டுபாட்டு விதிகள் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

  • திருமலை நுழைவாயிலில் காய்ச்சல் பரிசோதனைக்கு பின்னரே பக்தர்களை அனுமதிப்பது.
  • தினமும் 14 மணி நேரம் மட்டும் பகதர்களை தரிசனத்திற்க்கு அனுமதிப்பது.
  • ஒரு மணி நேரத்திற்க்கு 500 பக்தர்களை மட்டும் அனுமதிப்பது.
  • தினமும் 7000 பக்தர்களை மட்டுமே அனுமதிப்பது.
  • 100 ரூபாய் டிக்கட்டுகளை மட்டுமே ஆன்லைன் மூலம் தேதி நேரம் குறிப்பிட்டு விற்பது. கொரோனா கட்டுக்குள் வரும் வரை பொது தரிசனத்திற்க்கு அனுமதி இல்லை.
  • கோவிலுக்கு சொந்தமான தங்கும் அறைகளில் தவிர்க்க முடியாத காரணம் இருந்தால் மட்டும் இரண்டு பேருக்கு மட்டுமே அனுமதி தருவது.

மேலும் திருமலையில் நுழைவதற்கே நாள் ஒன்றுக்கு இத்தனை வண்டிகள் மட்டுமே, அதுவும் தரிசனத்திற்க்கு 3 மணி நேரம் முன்னர் மட்டுமே அனுமதிப்பது என்றும் தரிசனம் முடிந்தவுடன் உடனடியாக அவர்கள் திரும்ப அறிவுறுத்தப்படுவார்கள் என கூறப்படுகிறது.

மே 17ம் தேதி முதல் சோதனை முயற்ச்சியாக கோவில் ஊழியர்களை தரிசனத்துக்கு அனுமதிப்பது. தொடர்ந்து 15 நாட்களுக்கு திருப்பதி, திருமலையில் வசிக்கும் உள்ளூர் மக்களை அனுமதிப்பது, அதன் பின்னர் சித்தூர் மாவட்டத்தில் உள்ள மக்களை அனுமதிப்பது, அதனை தொடர்ந்து வெளியூர் பக்தர்களை அனுமதிப்பது என்ற முடிவை தேவஸ்தான நிர்வாகம் எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

author avatar
Parthipan K