பிரசவத்திற்கு பின் ஏற்படும் தழும்புகள் மறைய இவ்வாறு செய்து பாருங்கள்!! கட்டாயம் 100% பலன் கிடைக்கும்!!

0
177
#image_title

பிரசவத்திற்கு பின் ஏற்படும் தழும்புகள் மறைய இவ்வாறு செய்து பாருங்கள்!! கட்டாயம் 100% பலன் கிடைக்கும்!!

கர்ப்பமாக இருக்கும் போது, குழந்தை வளர வளர சருமத்தின் எலாஸ்டிக் தன்மை அதிகரித்து விரிவடைந்து, பின் குழந்தை பிறந்த பின்பு மீண்டும் பழைய நிலைக்கு வரும் போது, நமது சருமம் விரிவடைந்து சுருங்கும் போது வயிற்றைச் சுற்றி ஆங்காங்கு தழும்புகள் போன்று கோடுகள் இருக்கும்.

இந்த தழும்புகள் குறித்த கவலை பெரும்பாலான பெண்களுக்கு இருக்கிறது. கவலை வேண்டாம் இந்த தழும்புகளை சில எளிய வழிகள் மூலம் சரி செய்யலாம். அது என்ன என்பதை பற்றி பார்க்கலாம்.

எலுமிச்சையை சின்ன சின்ன துண்டுகளாக கட் செய்து வைத்துக் கொண்டு சிசேரியன் செய்த காயத்தழும்பின் மீது தேய்க்கவும். 6 மாதங்கள் வரை தொடர்ந்து இவ்வாறு செய்து வர தழும்புகள் மறைந்து விடும். எலுமிச்சை சாறு காய்ந்த உடன் 5 நிமிடத்திற்குள் குளிர்ச்சியான தண்ணீரை விட்டு கழுவிவிடுங்கள். வறண்ட சருமத்தினர் எலுமிச்சையை தவிர்க்கவும்.

சோற்றுக்கற்றாழையை நன்றாக உரித்து அதன் ஜெல்லினை எடுத்து காய தழும்புள்ள இடத்தில் தடவலாம். இரவில் தடவி வைத்திருந்து பகலில் குளிர்ந்த நீரைக் கொண்டு கழுவிவிட்டு நன்றாக துடைத்து விடவும். அதன் பின்னர் பேபி லோசனை அந்த இடத்தில் அப்ளை செய்யலாம். தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு இவ்வாறு செய்து வர தழும்புகள் மறையும்.

தக்காளியை தோல் உறித்து அதை மிக்ஸியில் போட்டு நன்கு அரைக்கவும். அந்த பேஸ்ட்டை எடுத்து சிசேரியன் தழும்பு உள்ள பகுதிகளில் அப்ளை செய்யவும். இரவு நேரத்தில் தக்காளி சாஸ் அப்ளை செய்து விட்டு காலையில் எழுந்து குளிர்ந்த நீரில் கழுவி விடலாம். தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு இந்த தக்காளி சாஸ் தடவி வந்தால் தழும்புகள் மறைந்து விடும்.

அவோகேடோ, பாதாம் போன்றவற்றால் தயாரிக்கப்பட்ட எண்ணெய்களைப் பயன்படுத்தி வந்தால் நாளடைவில் ஸ்ட்ரெட்ச் மார்க்குகளை நீக்கிவிடும். அதிலும் இந்த எண்ணெய்களை லாவெண்டருடன் சேர்த்து தடவி மசாஜ் செய்தால், மறுமுறை அந்த ஸ்ட்ரெட்ச் மார்க்குகள் வராமல் தடுக்கும்.

 

author avatar
Selvarani