மழைக்காலம் ஆரம்பிச்சாச்சு ! இப்பொழுது வரும் சளி, இருமல் நீங்க பாட்டி வைத்தியம்!

0
79

மழைக்காலம் ஆரம்பிச்சாச்சு! இப்பொழுது குழந்தைகள் இருந்து பெரியவர்கள் வரை சளி, இருமல், காய்ச்சல், தலை பாரம் என வந்து பாடாய் படுத்தும். அதை நீக்க வராமல் தடுக்க இயற்கையாக நம் முன்னோர்கள் பயன்படுத்திய வழிமுறையை காண்போம்!

அதற்கு கடைகளில் போய் வாங்க வேண்டும் என்பதில்லை. வீட்டில் பயன்படுத்த கூடிய பொருள் தான்.

தேவையான பொருட்கள்:

1. சீரகம்

2. தேன்

செய்முறை:

1. முதலில் தேவையான சீரகத்தை எடுத்து மிக்ஸியில் போட்டு நன்றாக இடித்து சலித்து எடுத்து கொள்ளவும்.

2. முதலில் ஒரு பௌலை எடுத்து கொள்ளவும். அதில் சீரக பொடியை 1 ஸ்பூன் போட்டு கொள்ளவும்.

3. பிறகு ஒரு ஸ்பூன் அளவு சுத்தமான தேன் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

4. அவ்வளவு தான் கலவை தயார்.

இதனை எப்பொழுது வேண்டுமானாலும் சாப்பிடலாம். மூன்று வேளை சாப்பிடலாம்.

சாப்பிடும் பொழுது நன்றாக வாயில் வைத்து கரைத்து சாப்பிட வேண்டும். அது தொண்டையில் படும் பொழுது இருமல் அடுத்த நாளே குணமாகும். 5 மாதம் மேல் உள்ள குழந்தைகளுக்கு கால் ஸ்பூன் கொடுக்கலாம்.

 

author avatar
Kowsalya