தீபாவளியன்று செய்து பாருங்கள்! சுவையான மூளை மிளகு வறுவல்!

0
80

தீபாவளியன்று செய்து பாருங்கள்! சுவையான மூளை மிளகு வறுவல்!

 

தேவையான பொருட்கள் :

முதலில் மூளை இரண்டு , மஞ்சள் தூள் கால் டீஸ்பூன் , தேவையான அளவு உப்பு, இஞ்சி பூண்டு பேஸ்ட் இரண்டு டீஸ்பூன். இவை அனைத்தையும் சரியான அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு அரைக்க தேவையான பொருட்கள் :

பத்து மிளகு,அரை டீஸ்பூன்

சீரகம் ,ஒரு

பட்டை ,இரண்டு

கிராம்பு , ஒரு ஏலக்காய்,கால் டீஸ்பூன் சோம்பு ,ஒரு டேபிள் ஸ்பூன் தனியா,

தாளிக்க தேவையான பொருட்கள்:

தேவைக்கேற்ப எண்ணெய் ,

தேவைக்கேற்ப டால்டா ,

கொத்தமல்லி தழை ஒரு கைப்பிடி அளவு.

செய்முறை : முதலில்  மூளையை மேலே உள்ள மெல்லிய தோலை எடுத்து விட்டு கட் பண்ணி கொள்ள வேண்டும்.

அதன் பிறகு மூளையை மஞ்சள் தூள், உப்பு, இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு குக்கரில் தேவையான அளவு தண்ணீர் விட்டு இரண்டு விசில் விட்டு இறக்க வேண்டும்.

 

பிறகு பொடி செய்ய வேண்டிய பொருட்களை வெறும் வாணலியில் வறுத்து ஆற வைக்க வேண்டும்.அதன் பிறகு அதனை பொடி செய்து கொள்ள வேண்டும்.

 

அதனையடுத்து ஒரு இரும்பு வாணலியில் எண்ணெய், டால்டா இரண்டையும் ஊற்றி பொடி செய்த பொடியை முழுவதும் போட்டு வேக வைக்க வேண்டும்.அதனுடன் மூளையையும் போட்டு தண்ணீர் முழுவதும் சுண்ட விட்டு அதை சிறு துண்டுகளாக போட்டு நல்ல முறுகலாக வறுத்தெடுத்து கொத்தமல்லி தழை தூவி இறக்க வேண்டும்.சுவையான மூளை மிளகு வறுவல் ரெடி ஆகிவிடும்.

 

 

 

 

 

 

 

 

author avatar
Parthipan K