கருவேப்பிலையை இப்படி பயன்படுத்துங்க! ஒரே வாரத்தில் முடி கருகருவென அடர்த்தியாக வளரும்!

0
237

முடி வளர வேண்டும் என்று யாருக்குத்தான் ஆசை இருக்காது. முடி கருமையாக நன்கு அடர்த்தியாக நீளமாக வளர வேண்டும் என்பது அனைத்து பெண்களின் ஆசை. அதேபோல் ஆண்களுக்கு முடி கருமையாக அடர்த்தியாக இருக்க வேண்டும் என்பது ஆண்களுடைய ஆசையாகவும் இருக்கும்.ஆனால் இன்றைய காலகட்டத்தில் உண்ணும் உணவுப் பழக்கங்களால் விரைவிலேயே இளநரை முடி உதிர்தல் ஆகிய பிரச்சனைகள் வந்துவிடுகின்றன. இதற்கு இயற்கையான தீர்வு ஒன்றை நாம் இந்தப் பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

1. கறிவேப்பிலை இரண்டு கைப்பிடி

2. வெந்தயம் 2 ஸ்பூன்

3. நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய்.

செய்முறை:

1. முதலில் இரண்டு கைப்பிடி அளவு கறிவேப்பிலையை இரண்டு முறை கழுவி நன்கு சுத்தம் செய்து நிழலில் உலர்த்தி எடுத்துக்கொள்ள வேண்டும். அதிகமாக உலர்ந்து விட கூடாது நிறம் மாறினால் போதும்.

2. ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து உலர்ந்த கருவேப்பிலைகளை போட்டு இரண்டு ஸ்பூன் வெந்தயத்தை போட்டு பொடித்துக் கொள்ளவும்.

3. ஒரு காட்டன் துணியை எடுத்துக் கொள்ளுங்கள். அது வெள்ளை துணி அல்லது சாயம் போகாத காட்டன் துணியாக இருந்தால் நல்லது.

4. பொடித்து வைத்து இருந்த கருவேப்பிலைப் பொடியை அந்தத் துணியில் போட்டு மூட்டை கட்டிக் நூலில் கட்டி கொள்ளவும்.

5. இப்பொழுது கண்ணாடி பாட்டில் ஒன்றை எடுத்துக்கொள்ளவும் அல்லது சில்வர் பாத்திரம் கூட பயன்படுத்தலாம்.

6. அதில் 150 மில்லி நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும்.

7. இந்த எண்ணெயில் மூட்டை கட்டி வைத்திருந்த கருவேப்பிலை  மூட்டையை போடவும்.

8. இதை 4 அல்லது 5 நாள் வெயிலில் அல்லது நார்மல் ரூம் டெம்பரேச்சரில் வைத்து விட்டு அதன் பிறகு பயன்படுத்துங்கள்.

நிறம் அடர்ந்த பச்சை நிறத்தில் மாறி வருவதை உங்களால் காண முடியும். எண்ணெய் தேய்த்துக் குளிக்க போகிறீர்கள் என்றால் நல்லெண்ணெய் பயன்படுத்திக் கொள்ளலாம் அல்லது வெளியே அலுவலகங்களுக்கு செல்கிறீர்கள் என்றால் தேங்காய் எண்ணையை பயன்படுத்தி கொள்ளலாம் எந்த வாடையும் வராது. இந்த கருவேப்பிலை மூட்டைகளை நீங்கள் மூன்று முறை பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்த முறையை நீங்கள் தொடர்ந்து செய்து வரும் பொழுது உங்கள் முடி கரு கருவென நீளமாகவும் அடர்த்தியாகவும் வளரும் முடி உதிர்தல் நின்றுவிடும்.

author avatar
Kowsalya