டிரம்ப்க்கும் டிவிட்டர் நிறுவனத்திற்கும் இடையே மோதல் அதிகரிப்பு! வீடியோவை நீக்கியது டிவிட்டர்

டிவிட்டர் நிர்வாகத்திற்கும் அமெரிக்க அதிபரான டிரம்ப்புக்கும் இடையே கடந்த சில நாட்களாக கடும் கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. டிரம்ப்பின் சில பதிவுகளை டிவிட்டர் நிறுவனம் தடை செய்துள்ளது. இதுபோன்று வேறெந்த அமெரிக்க அதிபர்களுக்கு எதிராகவும் டிவிட்டர் நடந்து கொண்டதில்லை.

அமெரிக்காவில் கடந்த 24ம் தேதி ஜார்ஜ் பிளாய்டு என்ற கருப்பின இளைஞர் போலீசாரால் கைது செய்யப்பட்டு கழுத்தில் கால் வைத்து நெரித்து கொல்லப்பட்டார். மொத்தமாக அந்த நாட்டை இந்த சம்பவம் புரட்டிப் போட்டு உள்ளது.பெரும் போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில் பிளாய்ட் மறைவு தொடர்பாக டிரம்ப் ஒரு இரங்கல் வீடியோவை டிவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

அதில் போராட்ட புகைப்படங்கள், அதில் நடந்த வன்முறை புகைப்படங்களுக்கு பின்னணியில் டிரம்ப் மிக உருக்கமாக பேசுகிறார்.பிளாய்ட் மரணம் மிக சோகமானது என்றும் நான் நியாயமான அமைதியான சமுதாயத்தை நோக்கி இணக்கமாக செயல்படுகிறேன்,’ என கூறியுள்ளார்.

ஆனால், அந்த வீடியோவில் காட்டப்பட்ட புகைப்படங்கள் காப்புரிமை பெற்றவை என்பதால், அந்த வீடியோவை நீக்குவதாக டிவிட்டர் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் இது, டிரம்ப் மற்றும் டிவிட்டர் நிறுவனத்திற்கு இடையேயான மோதலை அதிகரித்துள்ளது.

Copy

Comments are closed.

WhatsApp chat