பைட்டான்ஸ் நிறுவனத்துக்கு டிரம்ப் புதிய உத்தரவு

0
70
டிரம்ப் சில மாதங்களாக சீனாவின் மீது வெறுப்பை காட்டி வருகிறார். அந்த வகையில் பைட்டான்ஸ் நிறுவனமானது சீனாவைச் சேர்ந்ததாகும் இந்த நிறுவனத்திற்கு சொந்தமானது தான் டிக் டாக் செயலி  இந்த செயலி அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு, வெளியுறவு கொள்கை மற்றும் பொருளாதாரத்துக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக டிரம்ப் நிர்வாகம் குற்றம்சாட்டி வருகிறது. இதன் காரணமாக அமெரிக்காவில் டிக் டாக் செயலிக்கு தடை விதிக்கலாம் என டிரம்ப் முடிவு செய்துள்ளார்.
இது மட்டுமில்லாமல் டிக்-டாக் நிறுவனத்துக்கு எதிராக புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அந்த அறிக்கையில் அமெரிக்காவில் வெளிநாட்டு குழுவின் நிபந்தனைகளின் பேரில் பைட்டான்ஸ், அதன் துணை நிறுவனங்கள் மற்றும் சீன பங்குதாரர்கள் அமெரிக்காவில் செய்துள்ள முதலீடுகள் உள்ளிட்ட அசையும் மற்றும் அசையா சொத்துக்களை என எல்லாவற்றையும் 90 நாட்களுக்குள் விலக்கிக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.
author avatar
Parthipan K