ட்ரம்பின் தூண்டுதலால் தாக்கப்பட்ட அமெரிக்க நாடாளுமன்றம்!

0
112

அமெரிக்க தேர்தலில் தன்னுடைய தோல்வியை இன்னும் கூட ஏற்றுக் கொள்ளாத அதிபர் டொனால்டு டிரம்பின் ஆதரவாளர்கள் அமெரிக்க நாடாளுமன்றத்தில் புகுந்து தாக்குதல் நடத்தியதை உலகமே அதிர்ச்சியுடன் பார்த்து வருகிறது.

அமெரிக்க நாடாளுமன்றக் கூட்டம் கேப்பிட்டல் என்று அழைக்கப்படுகின்றது. இங்கே அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடனின் வெற்றியை உறுதிப்படுத்துவதற்காக செனட் காங்கிரஸ் எனும் இரண்டு அவைகளை கொண்ட நாடாளுமன்றம் ஜனவரி மாதம் ஆறாம் தேதி ஒன்று கூடியது.

அதே சமயத்தில் நாடாளுமன்றத்திற்கு வெளியே கூடியிருந்த ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களிடையே டிரம்ப் பேசிக்கொண்டிருந்தார் நான் தான் தேர்தலில் வெற்றி அடைந்தேன் அதற்கு மாறாக முடிவெடுக்கும் நாடாளுமன்றத்திற்கு எதிராக ஒன்று திரண்டு வாருங்கள். ஒன்று திரள்வோம் நம்முடைய துணிச்சலான செனடர்கள் மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்களை ஒருங்கிணைப்போம் என அழைப்பு விடுத்திருந்தார். அவர் ஒருபுறம் பேசிக்கொண்டிருக்க டிரம்பின் ஆதரவாளர்கள் அமெரிக்காவின் கேப்பிட்டலின் மேற்கு சுவரில் ஏறி இருக்கிறார்கள்.

அதன்மீது ஏறி உள்ளே சென்று நாடாளுமன்றத்தின் கண்ணாடிகள் போன்ற பொருட்களை தாக்கியிருக்கிறார்கள்.. கூட்டு கூட்டம் ஆரம்பித்தபோது டிரம்பின் ஆதரவாளர்கள் படிக்கட்டுகளில் அமைக்கப்பட்டிருந்த காவல் துறை தடுப்புகளை கடந்து சென்று இருக்கிறார்கள். தடைகளை தாண்டி சென்று இருக்கிறார்கள். அப்போது அவர்கள் துரோகி, துரோகி, என்று கத்திக்கொண்டே சென்றிருக்கிறார்கள். இதன் காரணமாக. திடீரென்று காங்கிரஸ் ஆகிய இரு அவைகளும் நிறுத்தப்பட்டன.

வெளியே கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன. அப்பொழுது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் கண்ணீர் புகையில் இருந்து காக்கும் கவசம் அளிக்கப்பட்டது. அதற்கு பல தடைகளை தாண்டி பல பொருட்களை உடைத்து டிரம்பின் ஆதரவாளர்கள் நாடாளுமன்றத்திற்குள் நுழைந்திருக்கிறார்கள் அவர்களை தடுக்கும் விதமாக காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், ஒருவர் உயிரிழந்து இருக்கின்றார். அதோடு 4 பேர் படுகாயம் அடைந்து இருக்கிறார்கள்.

டிரம்பின் வெளிப்படையான தூண்டுதல் காரணமாகவே அமெரிக்க நாடாளுமன்றம் தாக்கப்பட்டதற்கு உலகம் முழுவதிலும் இருந்தும் கண்டனங்களும், எதிர்ப்பும் எழுந்திருக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here