தேசிய கட்சி என்ற அந்தஸ்தை இழந்தது திரிணமூல் காங்கிரஸ்!!

0
146
#image_title

தேசிய கட்சி என்ற அந்தஸ்தை இழந்தது திரிணமூல் காங்கிரஸ்!!

திரிணமூல் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட மூன்று கட்சிகளுக்கு வழங்கப்பட்டிருந்த தேசிய கட்சி என்ற அந்தஸ்தை தேர்தல் ஆணையம் திரும்ப பெற்றுள்ளது.

ஒரு கட்சி தேசிய கட்சி என்ற அந்தஸ்தை பெற வேண்டும் என்றால் நான்கு மாநிலங்களில் அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சி என்ற அந்தஸ்தை பெற்றெடுக்க வேண்டும்.

அல்லது கடைசியாக நடைபெற்ற நாடாளுமன்ற மற்றும் மக்களவைத் தேர்தலில் பதிவான மொத்த வாக்குகளில் 06% சதவீத வாக்குகளை பெற்றிருக்க வேண்டும்.

இந்த நிலையில் இந்த தகுதிகளை பூர்த்தி செய்யாத காரணத்தினால் மேற்கு வங்கத்தை சேர்ந்த திரிணமூல் காங்கிரஸ் கட்சி,சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய மூன்று கட்சிகளுக்கு வழங்கப்பட்டிருந்த தேசிய கட்சி என்ற அந்தஸ்தை தேர்தல் ஆணையம் திரும்ப பெற்றுள்ளது.

திரிணமூல் காங்கிரஸ் கட்சி மேற்கு வங்கம் மற்றும் திரிபுரா ஆகிய மாநிலத்தில் மட்டும் அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியாக கருதப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி கோவா மணிப்பூர் மெஹாலயா ஆகிய மாநிலங்களில் மாநிலக் கட்சி என்ற அந்தஸ்தை இழந்திருப்பதாக தெரிவித்துள்ள தேர்தல் ஆணையம் தேசியவாத காங்கிரஸ் கட்சி இனி மகாராஷ்டிரா மற்றும் நாகாலாந்து ஆகிய மாநிலத்தில் மட்டும் அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியாக கருதப்படும் என தெரிவித்துள்ளது.

அதே போல 1989 முதல் பெற்று வந்த தேசிய கட்சி என்ற அந்தஸ்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இழந்துள்ளது.

சி.பி.ஐ கட்சிக்கு மேற்குவங்கம் ஒடிசா ஆகிய மாநிலங்களில் வழங்கப்பட்டிருந்த மாநில கட்சி என்ற அந்தஸ்து திரும்ப பெறப்படுவதாக தெரிவித்துள்ள தேர்தல் ஆணையம் கேரளா மணிப்பூர் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் மட்டும் அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியாக கருதப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது

author avatar
Savitha