இந்த தேதிகளில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் அவ்வளவுதான் ஜாக்கிரதை! போக்குவரத்து துறைவிடுத்த அதிரடி எச்சரிக்கை!

0
66

திமுக அரசு பொறுப்பேற்றவுடன் அரசுப் பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணம் என்ற திட்டத்தை செயல்படுத்தியது.இதனால் தமிழக பெண்கள் அனைவரும் மட்டற்ற மகிழ்ச்சியில் காணப்பட்டார்கள்.ஆனால் பேருந்து நிலையங்களில் பேருந்திற்காக பெண்கள் காத்திருந்தால் அரசு பேருந்துகளின் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் உள்ளிட்டோர் சட்டை செய்வதில்லை என்று புகார் எழ தொடங்கியது.அதோடு தமிழக அரசின் போக்குவரத்து கழகம் தமிழக அரசின் இந்தத் திட்டம் காரணமாக, நலிவுற்று காணப்படுவதாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களில் இயங்கிவரும் சில தொழிற்சங்கங்கள் பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி மார்ச் மாதம் 28 29 உள்ளிட்ட தேதிகளில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்திருக்கிறார்கள்.

இந்த சூழ்நிலையில், வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டால் ஊதியப் பிடித்தம் செய்யப்படுவதுடன் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அரசு ஊழியர்களுக்கு போக்குவரத்து துறை எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

அதோடு வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது பொதுமக்களுக்கும், பாதகம் விளைவிக்கக் கூடிய செயலாகும் கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் மருத்துவமனைகள் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய பணிகளுக்கு செல்லும் பொது மக்களுக்கு வேலை நிறுத்தம் இடையூறை உண்டாக்கும் மார்ச் மாதம் 28, 29 உள்ளிட்ட தேதிகளில் எந்தவிதமான விடுப்பும் வழங்கப்படமாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதோடு ஏற்கனவே வழங்கப்பட்ட விடுப்புகளும் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பணிக்கு வருகை தரவில்லையென்றால் ஆப்சென்ட் மார்க் செய்யப்பட்டு ஊதியப் பிடித்தம் மேற்கொள்ளப்படும் என்றும், தெரிவிக்கப்பட்டுள்ளது. வருகை பணிக்கு வருகை தராமலிருக்கும் பணியாளர்கள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று போக்குவரத்து துறை கடுமையாக எச்சரிக்கை விடுத்திருக்கிறது.