சனிப்பெயர்ச்சி மீன ராசிக்காரர்களே! பலன்கள் மற்றும் பரிகாரங்கள்!

0
111

சனிப்பெயர்ச்சி மீன ராசிக்காரர்களே! பலன்கள் மற்றும் பரிகாரங்கள்!

27.12.2020 முதல் 19.12.2023 வரைஎந்த வகை வலையாயினும் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு மீண்டு வரும் மீன ராசி அன்பர்களே.சனியின் நாமம் : லாப சனி சனி பார்வையிடும் இடங்கள்3ம் பார்வை7ம் பார்வை10ம் பார்வைராசிபஞ்சம ஸ்தானம்அஷ்டம ஸ்தானம்

உங்கள் ராசிக்கு பத்தாம் இடமான ஜீவன ஸ்தானத்தில் இருந்துவந்த சனிபகவான் இப்போது தங்களின் ராசிக்கு லாப ஸ்தானமான பதினொன்றாம் இடத்தில் இருக்கிறார்.

சனி தான் இருக்கும் வீட்டில் இருந்து மூன்றாம் பார்வையாக ராசியையும், ஏழாம் பார்வையாக பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தையும், பத்தாம் பார்வையாக அஷ்டம ஸ்தானத்தையும் பார்க்கின்றார்.

பேச்சுக்களில் நிதானம் வேண்டும். குலதெய்வ வழிபாடு தொடர்பான எண்ணங்கள் மேம்படும். சுரங்க பணியில் மேன்மையான வாய்ப்புகள் ஏற்படும். மனதில் எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும். எதிர்பாராத சில தனவரவுகளால் பொருளாதார நெருக்கடிகள் குறைந்து மேன்மை உண்டாகும். வீட்டில் சுபக்காரியங்கள் தொடர்பான நிகழ்ச்சிகளால் மனமகிழ்ச்சி உண்டாகும். நெருங்கிய உறவினர்கள் அல்லது நண்பர்களிடம் சூழ்நிலைகள் அறிந்து பேசுவது நன்மையை அளிக்கும். பூர்வீகச் சொத்துக்கள் தொடர்பான பராமரிப்புச் செலவுகள் நேரிடலாம்.

சனி பெயர்ச்சி உத்தியோகஸ்தர்களுக்கு :உத்தியோகஸ்தர்கள் தங்களின் பணிகளை மற்றவர்களை நம்பி ஒப்படைப்பதைக் காட்டிலும் தாமே முடிப்பது நன்மையை தரும். செய்யும் வேலையை திருப்தியுடன் செய்யவும். பணி நிமிர்த்தமான மாற்றங்களை தகுந்த ஆலோசனைகளுக்கு பிறகு முடிவு செய்யவும். நீண்டநாள் ஆசைகள் நிறைவேறும். வேலை தொடர்பான ரகசியங்களை எவரிடமும் பகிர வேண்டாம்.

சனி பெயர்ச்சி பெண்களுக்கு :தேவையற்ற எண்ணங்களை தவிர்ப்பதன் மூலம் மனத்தெளிவு உண்டாகும். குழந்தைகளின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். தம்பதிகளுக்குள் சிறு வாக்குவாதங்கள் தோன்றி மறையும். எதிர்பாலின மக்களிடம் விழிப்புணர்வுடன் இருக்கவும். இறைவழிபாடு தொடர்பான பயணங்களை மேற்கொள்வதற்கான சூழல் உண்டாகும். தாய்வழி உறவினர்களிடம் சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் அனுசரித்து செல்லவும். திறமைக்கேற்ப வேலை வாய்ப்புகள் கிடைக்கும். பெற்றோர்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றுவீர்கள்.

சனி பெயர்ச்சி மாணவர்களுக்கு :உயர்கல்வி பயிலும் மாணவர்கள் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும். ஆராய்ச்சி சார்ந்த துறையில் இருப்பவர்களுக்கு வெளியூர் தொடர்பான பயணங்கள் மற்றும் அலைச்சல்கள் உண்டாகும். எதிலும் சுறுசுறுப்புடன் செயல்பட எண்ணிய வெற்றி கிடைக்கும். தேர்வுக்கு தேவையான பாடங்களை ஒருமுறைக்கு இருமுறை படிப்பது மேன்மை தரும்.

வழிபாடு முறை :மூல நட்சத்திரத்தன்று வடமாலை சாற்றி ஆஞ்சநேயரை வழிபட்டு வர தெளிவு கிடைக்கும்.

 

author avatar
Parthipan K