அரசியலில் நுழைய நினைக்கும் திருநங்கைகள்! சீட் வழங்குமா திமுக?

0
80
Transgender people who want to enter politics! Will DMK provide seats?
Transgender people who want to enter politics! Will DMK provide seats?

அரசியலில் நுழைய நினைக்கும் திருநங்கைகள்! சீட் வழங்குமா திமுக?

கடந்த வருடம் 2019 ஆம் ஆண்டு நடந்த  ஊராக உள்ளாட்சி தேர்தல் இரு கட்டங்களாக நடைபெற்றது.இதில் பல வேட்பாளர்கள் கலந்துக்கொண்டு போட்டியிட்டனர்.அதில் நாமக்கல்  மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் இரண்டாவது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு திருநங்கையாக ரியா என்பவர் போட்டியிட்டார்.அவர் 950 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.இவரது இந்த வெற்றியானது பலருக்கு முன் உதராமாக இருந்தது.

அதைனையடுத்து வரும் ஏப்ரல் மாதம் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ராசிபுரம் சட்டசபைத் தொகுதில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்துள்ளார். விருப்பமனு தாக்கல் செய்தவர்களுக்கு நேர்காணல் நடத்தப்படும் இவர் நேர்காணலையும் முடித்துள்ளார்.இவருக்கு சீட் கொடுத்தால் தேர்தலில் வெற்றி பெறுவார் என அனைவரும் கூறுகின்றனர்.அதுமட்டுமல்லாமல் அந்த பகுதியிலுள்ள மக்கள் அனைவரும் இவர் ராசிபுரம் தொகுதியில் வெற்றிபெற்றால் அப்பகுதியின் அனைத்து குறைகளையும் தீர்ப்பார் என கருதுகின்றனர்.

இவர் வெற்றி பெற இணையத்தளங்களிலும் பல ஆதரவு குரல்கள் எழுந்து வந்துள்ளது.இதேபோல் கொளத்தூர் தொகுதில் அப்சார ரெட்டி என்னும் திருநங்கை போட்டியிடுகிறார்.இவர் திமுகவை கண்டிப்பாக  தோற்கடிப்பேன் என்று கூறுகிறார்.இக்கால திருநங்கைகள் காவல் அதிகாரி,மருத்துவம்,அரசியல்,ஆசிரியர் என அனைத்து துறைகளிலும் கலக்கி வருகின்றனர்.இவர்கள் மற்ற திருநங்கைகளுக்கு முன் உதாரமாக இருக்கின்றனர்.