ஆத்திரத்தில் தனது ஆட்டோவை தானே தீயிட்டுக் கொளுத்திவிட்டு கதறி அழும் சோகம்!

0
63

சென்னை அயனாவரம் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் தாண்டமுத்து. இவர் ஆத்திரத்தில் தனது ஆட்டோவை பெட்ரோல் ஊற்றி எரித்து விட்டு நடுரோட்டில் கதறுகிறார்.

கொரோனா பெருந்தொற்றினால் நடுத்தர மற்றும் ஏழை மக்கள் வாழ்வாதாரம் இழந்து வாழ வழியின்றி வருத்தத்தில் கஷ்டப்பட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில், சென்னை அயனாவரம் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் ஆண்டமுத்து தனது ஆட்டோவுக்கு f.c. ரெனிவல் செய்ய ஆர்டிஓ அலுவலகம் போகிறார். இன்ஷூரன்ஸ் காலாவதி ஆகிவிட்டதால், அங்குள்ள விதியைக் காரணம் காட்டி f.c. மறுக்கப்படுகிறது.

பொது முடக்கத்தினால் கடந்த 5 மாதமாக தொழிலில் வருமானம் இல்லாததால் இன்சூரன்ஸ் கட்ட முடியவில்லை என்று சொல்கிறார். இதனால் எப்.சி புதுப்பிக்கப்பட்ட இடத்தில் பதில் எடுபடவில்லை.

இதனால் விரக்தியும் ஆவேசமும் அடைந்து ஒன்று சேர்ந்து விடவே தனது ஆட்டோவுக்கு தீ வைத்துவிடுகிறார்.

ஊரடங்கு காலத்தில் கடந்த 5 மாதங்களாக மிக மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் அடித்தட்டு வர்க்கம், வாடகை வாகன ஓட்டுனர்களாக இருக்கின்றனர்.

அதிலும் கடன் வாங்கி வண்டி வைத்திருப்பவர்கள் கடந்த ஐந்து மாதமாக வருவாய் இல்லாததால் மாதத் தவணை அப்படியே மொத்தமாக நிலுவையில் இருக்கும். இந்த ஐந்து மாதங்களுக்கான வட்டிக்கு மேலும் வட்டி  இருக்கும்.

author avatar
Parthipan K