அரசு பள்ளி மாணவர்களுக்கு ஏற்பட போகும் விபரீதம்! பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் அரசிடம் கோரிக்கை!

0
97
Tragedy is going to happen to government school students! Parents and teachers request to the government!
Tragedy is going to happen to government school students! Parents and teachers request to the government!

அரசு பள்ளி மாணவர்களுக்கு ஏற்பட போகும் விபரீதம்! பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் அரசிடம் கோரிக்கை!

தற்போது மழைக்காலம் துவங்கியுள்ளது. இந்நிலையில் பொள்ளாச்சி மாவட்டத்தில் 222 துவக்க பள்ளிகளும் 56 நடுநிலைப் பள்ளிகளும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் உயர்நிலைப் பள்ளிகள் என 48 பள்ளிகள் உள்ளன. மேலும் இந்த பள்ளியில் அனைத்திலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். நிலையில் பெரும்பாலான பள்ளிகளில் கட்டிடம் முறையாக பராமரிக்கப்படுவதில்லை. அதனால் தற்போது மழை காலம் துவங்கியுள்ள சூழலில் மாணவர்கள் அமர்ந்திருக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது கட்டிடங்கள் ஆங்காங்கே இடிந்த நிலையில் இருக்கின்றது.

அதனால் மாணவர்கள் தினமும் ஒருவகையான அச்சத்துடனே பள்ளிக்கு வந்து படித்து செல்கின்றனர். மேலும் தொப்பாம்பட்டி துவக்கப்பள்ளி 2004 ஆம் ஆண்டு நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது இப்பள்ளியில் இரண்டு வகுப்பறைகள் தலைமை ஆசிரியர்கள் அறை கழிப்பிடம் போன்ற கட்டிடம் இடிக்கப்பட்டது. அதற்கு பதிலாக வேறு கட்டிடம் எதுவும் கட்டித் தரப்பட்டுள்ள படவில்லை. மேலும் பள்ளி வளாகத்தில் உள்ள இரண்டு கட்டிடம் பள்ளிக்கு எதிரே உள்ள இடத்தில் கட்டப்பட்ட மூன்று வகுப்பறை கட்டிடமும் சேதமடைந்து காணப்படுகிறது.

மேலும்  வராண்டாவில் உள்ள மேற்கூரை இடிந்த நிலையில் கான்கிரீட் கம்பிகள் வெளியே தெரிகின்றன மேலும்  விரிசல் ஏற்பட்டு எப்போது வேண்டுமானாலும் விழும் நிலையில் உள்ளது. மேலும் வகுப்பு கட்டிடங்களின் மேல் தளத்தில் தண்ணீர் தேங்கி மழை நீர் கசிகிறது இதனால் மாணவர்கள் அமர்ந்து கல்வி கற்க முடியாத நிலையில் உள்ளனர் இந்த பள்ளியில் ஒன்றிய அதிகாரிகள் அவ்வப்போது மட்டும் செய்கின்றனர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. குழந்தைகளின் நிலையை கண்ட பெற்றோர் முதல்வர் தனி பிரிவுகள் பள்ளி கட்டடத்தை பராமரிக்க வேண்டும் என மனு அளித்தனர் தற்போது மழை இடைவிடாமல் பெய்து வரும் நிலையில் மாணவர்களின் பாதுகாப்பு கருதி மாற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் வலியுறுத்தி வருகின்றார்கள்.

மேலும் தொப்பம்பட்டி செந்நெறி பாளையம் பள்ளி இடங்களில் ஆங்காங்கே இடிந்து காணப்படுவதால் பள்ளியின் தலைமை ஆசிரியர் முடிவு எடுத்து சில கட்டிடங்களை பயன்படுத்தாமல் பூட்டி வைத்துள்ளனர். மேலும் அலட்சியம் காட்டாமல் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இல்லை என்றால் வீண் அசம்பாவிதங்கள் ஏற்படும் எனவும் பள்ளி நிர்வாகம் அரசாங்கத்திடம் மனு அளித்து வருகின்றனர். இந்த மனுவை ஏற்றுக் கொண்டு அனைத்து பள்ளிகளிலும் மோசமான நிலையில் உள்ள கட்டிடங்களை எடுத்து புதிய கட்டிடம் கட்ட கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் அப்போதுதான் அரசுகளில் படிக்கும் மாணவர்களுக்கு பாதுகாப்பு என்பது உறுதிப்படுத்தப்படும் எனவும் ஊர் பொதுமக்கள் மற்றும் ஆசிரியர்கள் தலைமை ஆசிரியர் போன்றவர்கள் தெரிவித்து வருகின்றனர்.

author avatar
Parthipan K