மதுரையில் விபரீதம்! கடன் தொல்லையால் கணவன் மனைவி தற்கொலை!

0
193
#image_title
மதுரையில் விபரீதம்! கடன் தொல்லையால் கணவன் மனைவி தற்கொலை!
மதுரையில் கடன் தொல்லை காரணமாக கணவன் மனைவி இருவரும் தூக்கிட்டுத் தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை செல்லூர் மீனாட்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் சிவப்பிரகாஷ். இவர் மதுரை மாட்டுத்தாவணி வாழைக்காய் சந்தையில் பணிபுரிந்து வந்தார். ஊழியராக பணிபுரிந்த இவர் வாழைக்காய் வியாபாரத்தில் கூலி வேலையிலும், கமிஷன் வியாபாரத்திலும் ஈடுபட்டு  வந்ததாக கூறப்படுகிறது.
இவருக்கு குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் அவர் சொந்தமாக கடை ஒன்று வைத்து நடத்த திட்டமிட்டார். அதற்காக பல்வேறு நபர்களிடம் இருந்து சுமார் ஐந்து லட்சம் ரூபாய் வரை கடனாக பெற்றதாக சொல்லப்படுகிறது.
சிலருக்கு மட்டும் வாங்கிய கடன் தொகையை சிறிது, சிறிதாக  திருப்பி கொடுத்துள்ளார். பிறகு பொருளாதார ரீதியில் சிரமத்தை சந்தித்தவர் வாங்கிய பணத்தை திருப்ப கொடுக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டார்.
கடன் கொடுத்தவர்கள் சிவப்பிரகாஷ் வீட்டிற்கு வந்து தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான சிவப்பிரகாசம் மற்றும் அவரது மனைவியும் வீட்டில் தனியாக இருந்த போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். இதுகுறித்து அப்பகுதி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
“விரலுக்கேத்த வீக்கம்” என்ற பழமொழியை அறிந்து அதன்படி வாழ்ந்தே, இதுபோன்ற பிரச்சனைகளை தவிர்க்கலாம் என்று நடுத்தர குடும்பத்தினர் கருத்து கூறுகின்றனர்.
author avatar
Savitha