3 மாத குழந்தைக்கு ஏற்பட்ட அவல நிலை! விரக்தியால் தாய் செய்த செயல்!

0
71
Tragedy for a 3 month old baby! The action of the mother out of frustration!
Tragedy for a 3 month old baby! The action of the mother out of frustration!

3 மாத குழந்தைக்கு ஏற்பட்ட அவல நிலை! விரக்தியால் தாய் செய்த செயல்!

வர வர உலகில் அனைவருக்கும் எதற்கு இவ்வளவு கோபம் வருகிறது என தெரியவில்லை. குற்ற சம்பவங்கள் நடைபெற ஒரு மனிதனுக்கு ஏற்படும் குரோத எண்ணமே காரணமாக அமைகிறது. இந்த சம்பவத்தில் கூட அந்த பெண்ணுக்கு ஏற்பட்ட ஆத்திரமே விபரீதபாக போய் முடிந்து விட்டது.

இதற்கு தான் ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும் என்று பெரியவர்கள் சொல்வார்கள். கணவன் மீதிருந்த வெறுப்பு மற்றும் கோவத்தின் வெளிப்பாடே குழந்தையை கவனிக்க பொறுமையில்லாமல் தாய் குற்றவாளி ஆகும் நிலை ஏற்பட்டு உள்ளது.

44 வயதான எகிப்து நாட்டைச் சேர்ந்த நபர் ஒருவர், தனது 26 வயது மனைவியுடன் துபாய் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்துள்ளார். இந்த தம்பதிக்கு 3 மாத ஆண் குழந்தை ஒன்று உள்ள நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவன், மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இதனையடுத்து, சம்பவத்தன்று காலையிலும் வழக்கம் போல் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்ட நிலையில் சிறிது நேரத்தில் அவரது கணவர் வேலைக்கு சென்று விட்டார்.ஆனால் கணவர் மீதுள்ள ஆத்திரத்தில் வீட்டில் அந்த பெண் எரிச்சல் பட்டுக்கொண்டே வீட்டு வேலைகளை செய்துகொண்டிருந்தார்.

சலவை செய்ய வாஷிங் மெஷினில் துணிகளை போட்டுக் கொண்டிருந்தபோது, டி.வி. பார்த்துக்கொண்டிருந்த குழந்தை திடீரென அழ தொடங்கியது. இதனால் குழந்தையை அழாமல் இருக்க செய்துள்ளார். ஆனால் குழந்தை தனது அழுகையை நிறுத்தாமல் தொடர்ந்து அழுது கொண்டே இருந்துள்ளது.

இதனால் கூடுதல் எரிச்சல் அடைந்த அந்த பெண் கணவரின் மீதுள்ள ஆத்திரத்தால் கையில் கிடைத்த டி.வி. ரிமோட்டை எடுத்து குழந்தையின் மீது ஓங்கி அடித்தார். இதில் சுருண்டு விழுந்த குழந்தை சிறிது நேரத்தில் உயிரிழந்தது. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல், வீட்டிலிருந்து தப்பி சென்றுவிட்டார்.

இதற்கிடையே அலுவலகம் முடிந்து வீட்டுக்கு வந்த கணவர், குழந்தை இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

இந்நிலையில், மனைவியும் வீட்டில் இல்லாததால் சந்தேகமடைந்த அவர் உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, தப்பி சென்ற குழந்தையின் தாய் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை தற்போது கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.