இரண்டு பிரிவுகளின் கீழ் பாய்கிறது வழக்கு! ஜெயக்குமார் மீது புகார் அளித்தது யார் தெரியுமா!

0
69

தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் பொது இடங்களில் முகக் கவசம் அணியாமல் சென்ற காரணத்தால் அவர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி அவர்கள் புகார் அளித்து இருக்கின்றார்.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்ததற்காக, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆளுநரை சந்தித்து நன்றி தெரிவித்திருக்கிறார். அவருடன் சென்றிருந்த அமைச்சர் ஜெயக்குமார், செய்தியாளர்கள் சந்திப்பின்போது முக கவசம் அணியாமல் இருந்திருக்கின்றார்.

இதனை தொலைக்காட்சியில் பார்த்த சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி, பொது இடங்களில் முக கவசம் அணியாமல் இருந்த அமைச்சர் ஜெயக்குமார் மீது 24 மணி நேரத்தில் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என சென்னை மாநகர காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பி இருக்கின்றார்.

அப்புகாரை கிண்டி காவல் நிலையத்திற்கு அனுப்பி இருக்கிறது காவல்துறை கட்டுப்பாட்டு அறை. மேல் அதிகாரிகள் உத்தரவு கிடைத்தால், அமைச்சர் உதயகுமார் மீது ஐபிசி 188, 269 ஆகிய பிரிவுகளின் கீழ் கிண்டி காவல் ஆய்வாளர் சென்று வழக்குப்பதிவு செய்ய இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.