வீட்டில் ஏற்பாடு செய்த தடபுடல் திருமணம்! மாப்பிள்ளை இருந்த நிலைமையை பார்த்து முகத்தில் அறைந்து இளம்பெண் செய்த செயல்!

0
139
Touch wedding arranged at home! The act of slapping the groom in the face after seeing the situation of the groom!
Touch wedding arranged at home! The act of slapping the groom in the face after seeing the situation of the groom!

வீட்டில் ஏற்பாடு செய்த தடபுடல் திருமணம்! மாப்பிள்ளை இருந்த நிலைமையை பார்த்து முகத்தில் அறைந்து இளம்பெண் செய்த செயல்!

மாப்பிள்ளை குடிபோதையில் இருந்ததன் காரணமாக மணப்பெண் மாலையை கழற்றி வீசி திருமணம் வேண்டாம் என்று சொன்ன செயல் உறவினர்களிடையே மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் பாலக்கோடு அருகே நடைபெற்று உள்ளது. இது குறித்த விவரங்கள் பற்றி மேலும் தெரிந்து கொள்ளலாம். தர்மபுரி மாவட்டத்தில் மாரண்டஅள்ளி அருகே தொட்டபடகாண்டஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சரவணன். 32 வயதான இவர் ஒரு கூலித்தொழிலாளி.

இவருக்கும் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த 22 வயது பெண்ணுக்கும் திருமணம் பெரியோர்களால் நிச்சயம் செய்யப்பட்டது. இந்நிலையில் இரு வீட்டு பெரியவர்களும் கலந்தாலோசித்து திருமண ஏற்பாடுகளை தடபுடலாக ஏற்பாடு செய்திருந்தனர். பத்திரிக்கை அச்சடித்து உறவினர்கள் மற்றும் ஊரில் உள்ளவர்களுக்கு எல்லாம் அழைப்பு கொடுத்து திருமணத்திற்கு அனைவரும் தயார் நிலையில் இருந்தனர். இந்தத் திருமணம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ராயக்கோட்டை அருகே உள்ள வஜ்ஜிரபள்ளம் என்ற கிராமத்தில் உள்ள ஈஸ்வரன் கோவிலில் நேற்று காலை 6 மணிக்கு நடைபெறுவதாக இருந்தது.

அதனால் மணப்பெண் தன்னை நன்றாக அலங்கரித்துக்கொண்டு வருங்கால திருமண வாழ்க்கையை பற்றிய பல கனவுகளோடு அவரது குடும்பத்தினர், உறவினர்களுடன் நேற்று முன்தினம் இரவே அந்த கோவிலுக்கு தங்க வந்து விட்டார்கள். ஆனால் மணமகன் வீட்டில் இருந்து யாருமே வரவில்லை. அதன் காரணமாக அனைவரும் சேர்ந்து மாப்பிள்ளை வீட்டிற்கு சென்றனர். ஆனால் அங்கு அவர்கள் கண்ட காட்சி அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்தது.

ஏனெனில் மணமகன் திருமணத்தை தயாராகாமலும், அவர் தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்ற சுய அறிவு கூட இல்லாமல் மதுபோதையில் அரைமயக்கத்தில் இருந்துள்ளார். இதைக்கண்ட மணமகள் மிகவும் அதிர்ந்து போய், இந்த மாப்பிள்ளையும் எனக்கு வேண்டாம், இந்த திருமணமும் வேண்டாம் என்று மிகவும் ஆவேசமாக கூறினார். அதோடு கழுத்திலிருந்த மாலையை கழற்றி அங்கேயே வீசி விட்டார்.

இதன் காரணமாக அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து மாப்பிள்ளை வீட்டார் மணமகள் வீட்டாரிடம் இந்த விஷயம் குறித்து சமரசம் பேச ஆரம்பித்தனர். ஆனால் அந்த மணமகளோ ஒரே வார்த்தையாக திருமணத்திற்கு முன்பே இப்படி குடிப்பவர், நாளை  திருமணத்திற்குப் பிறகு என்னை எப்படி பாதுகாப்பார். என் வாழ்க்கை எப்படி நகரும் என்று கண்ணீர் விட்டு அழுததோடு,  இந்த சம்பவம் தொடர்பாக மாரண்டஅள்ளி போலீசில் புகார் செய்தனர்.

அந்தப் புகாரின் மூலம் திருமணத்திற்கான செலவு தொகையை மணமகன் வீட்டாரிடம் வாங்கி தர வேண்டும் என்று போலீசாரிடம் தெரிவித்து இருந்தனர். அதன்பேரில் போலீசார் மாப்பிள்ளையான சரவணன் மற்றும் அவருடைய குடும்பத்தினரை அழைத்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது போதையில் இருந்து தெளிந்து இருந்த அந்த மணமகன் இனிமேல்தான் குடிக்க மாட்டேன் என்றும், அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்கிறேன் என்றும் போலீசாரிடம் கூறியுள்ளார்.

அதற்கு போலீசார் மணப்பெண் சம்மதித்தால் தாராளமாக செய்து கொள். நீ அங்கு போய் பேசி பார் என்று தெரிவித்துள்ளனர். அதன் காரணமாக காவல் நிலையத்திலேயே அந்த பெண்ணிடம் இனிமேல் நான் குடிக்க மாட்டேன் என்றும், திருமணம் செய்துகொள் என்றும் அந்த பெண்  கெஞ்சியுள்ளார். ஆனால் அந்த பெண் பிடிவாதமாகவும், அழுத்தத்துடனும் தைரியமாக மாப்பிள்ளை வேண்டாம் என்று கூறிவிட்டு அங்கிருந்து தனது உறவினர்களுடன் வீட்டிற்குத் திரும்பிவிட்டார்.

இந்த சம்பவம் காரணமாக அங்கு மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது. பெண்கள் இப்படித்தான் தைரியமாக இருக்க வேண்டும். ஏதோ வீட்டில் பார்க்கிறார்கள் என்று, என்னமோ திருமணம் செய்து கொண்டால், எதிர்காலம் கண்டிப்பாக கேள்விக்குறியாகத்தான் இருக்கும். எனவே அந்த விஷயத்தில் இந்த பெண்ணை கண்டிப்பாக பாராட்டத்தான் செய்ய வேண்டும்.