கொட்டி தீர்க்கும் கனமழை: 2-வது நாளாக தத்தளிக்கும் மக்கள்! மழை நீரில் மிதக்கும் சிதம்பரம்!

0
134

கொட்டி தீர்க்கும் கனமழை: 2-வது நாளாக தத்தளிக்கும் மக்கள்! மழை நீரில் மிதக்கும் சிதம்பரம்!

வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததால் சிதம்பரத்தில் நேற்று அதிகாலை வரை 30 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. கனமழை கொட்டி தீர்த்துள்ளதால் சிதம்பரம் நகரை சுற்றி உள்ள பல்வேறு இடங்களில் ஆயிரக்கணக்கான வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில் நேற்று அதிகாலை வரை சிதம்பரத்தில் அதிகபட்சமாக 30 சென்டிமீட்டர் மழை கொட்டி தீர்த்தது. சிதம்பரத்திற்கு அருகில் உள்ள அண்ணாமலை நகர் பகுதியில் 27.5 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. இந்த கன மழை காரணமாக சிதம்பரம் நகரை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

நேற்று மழை இல்லாததால் வெள்ளம் லேசாக வடிய தொடங்கியது. இந்த நிலையில் தற்போது இன்று காலை முதலே பரவலாக லேசான சாரல் மழை அவ்வப்போது விட்டு விட்டு பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக சிதம்பரம் நகரை ஒட்டி உள்ள சண்டேஸ்வரநல்லூர், கொய்யாப்பிள்ளை சாவடி, சிவசக்தி நகர், இந்திரா நகர், அம்பலவாணநகர், தென்னவன் நகர் உள்ளிட்ட பல்வேறு நகர் பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகளை தண்ணீர் புகுந்துள்ளது.

நேற்று மழை நின்றதால் தண்ணீர் வடிந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் மழை பெய்ய உள்ளதால் தண்ணீர் வடிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் நிம்மதி இழந்து தவித்து வருகின்றனர். பொதுமக்களுக்கு குடியிருப்பு பகுதிகளில் பாம்பு, விஷ ஜந்துகள் போன்றவைகள் வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

இந்த வட கிழக்கு பருவமழை பெய்ததில் இரண்டாவது நாளாக மழை நீர் வடியாததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

author avatar
Parthipan K