இந்தியாவிலும் தமிழகத்திலும் முதலிடத்தில் உள்ள  ஹேஷ்டேக்!

0
65

பிரதமர் நரேந்திர மோடியின் 70ஆவது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.இதனைத் தொடர்ந்து பாஜகவினர் மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றனர். குறிப்பாக சுற்றுப்புற பாதுகாப்புக்காக நகர்ப்புற மக்களுக்கு துணிப்பைகள் வழங்குதல் மற்றும் இலவச கண் பரிசோதனை முகாம் , ரத்த தான முகாம்கள் போன்ற நலத்திட்டங்களை மேற்கொள்கின்றனர். 

பிரதமர் மோடியின் எழுபதாவது பிறந்த நாளில் சென்னையில் பாஜகவினர் ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடி வருகின்றனர். தமிழக பாஜக தலைவர் எல் முருகன் பிரதமரின் பிறந்த நாளை கொண்டாடும் வகையில் 70 அடி நீள கேக் வெட்டி தொண்டர்களுக்கு வழங்கினார்.

இதெல்லாம் ஒருபுறமிருக்க இணையவாசிகள் பிரதமர் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து#HappyBirthdayPMModi , #Modiji, #NarendraModiBirthday, #PrimeMinister, #Shri, #pmofindia, #NAMOBIRTHDAY என்ற ஹெஷ்டேக்களை டுவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.

 #HappyBirthdayPMModi என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் முதல் இடத்திலும் தமிழகத்தில் மூன்றாவது இடத்திலும் உள்ளது. இதனை போல் தந்தை பெரியாரின் 142 வது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது இதனை முன்னிட்டு #HBDபெரியார் 142 தமிழகத்தின் முதல் இடத்தில் உள்ளது.

author avatar
Parthipan K