தமிழகத்தில் பொது தேர்வில்  முதலிடம்  பிடித்த மாவட்டம்! எத்தனை சதவீதம் தெரியுமா?

0
75
Top favorite district in general examination in Tamil Nadu! Do you know what percentage?
Top favorite district in general examination in Tamil Nadu! Do you know what percentage?

தமிழகத்தில் பொது தேர்வில்  முதலிடம்  பிடித்த மாவட்டம்! எத்தனை சதவீதம் தெரியுமா?

கடந்த மாதம் 5 ஆம் தேதி தேர்வு தொடங்கிய நிலையில்  இன்று அதற்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது.அதனை எஸ். எம். எஸ் மூலமும்  பார்க்கலாம் என கூறியுள்ளனர். மேலும் tnresult.nic.in, dge.tn.gov.in மற்றும் dge2.tn.nic.in
போன்ற இணையதளத்தில் சென்று முடிவுகளைக் காணலாம் என கல்வித்துறை தெரிவித்தது.அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள்,  ஒரே நாளில்  பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகளை காலை 10 மணிக்கும் ,பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் மதியம் 12 மணிக்கும் வெளியாகும் என  கூறினார்.

பத்தாம் வகுப்பில் மொத்தம் 94.07 சதவீத மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இன்று பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது.இந்நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில்  97.22 சதவீதம் தேர்ச்சி பெற்று  பெரம்பலூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது.மேலும்  பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வில் 79.87 சதவீதம் தேர்ச்சி பெற்று கடலூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது.இதனையடுத்து கன்னியகுமாரி,வேலூர் இடம் பிடித்துள்ளது.

author avatar
Parthipan K