ஒரு கிலோ தக்காளி ரூ.80! அதிர்ச்சியடைந்த மக்கள்

0

டெல்லி: டெல்லியில்  தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்து, ஒரு கிலோ 80 ரூபாய் வரை விற்கிறது.

மகராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் அதிகளவு தக்காளி விளைகிறது. கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களில் கனமழையால் தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டு, ஏற்றுமதி குறைந்தது.

அதன்காரணமாக, டெல்லியில் தக்காளி விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதனால் மக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகி இருக்கின்றனர். டெல்லியில் 2 வாரங்களுக்கு முன்பு, ஒரு கிலோ தக்காளி ரூ.45க்கு விற்கப்பட்டது.

ரகம், தரத்துக்கு ஏற்ப தற்போது ஒரு கிலோ தக்காளி 60 முதல் 80 ரூபாய் வரை விற்கப்படுகிறது.  இது குறித்து இல்லத்தரசிகள் கூறியிருப்பதாவது: எங்களின் தினசரி தேவைக்கு தக்காளி ரொம்ப அவசியமாகிறது.

தற்போது, விலை அதிகரித்துள்ளதால், குறைந்த அளவே தக்காளியை வாங்கி பயன்படுத்துகிறோம் என்றனர். இந்த பிரச்சனைக்கு தீர்வு காண, அதிகமாக உற்பத்தி செய்யும் மாநிலங்களில் இருந்து டெல்லிக்கு தக்காளி வினியோகத்தை உயர்த்துமாறு டெல்லி அரசு  கூறியிருக்கிறது.

மேலும் இதுபோன்ற தமிழ் செய்திகள், மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள், தொழில்நுட்ப செய்திகள், பொழுதுபோக்கு செய்திகள், சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் பேன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும், முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.

Copy

Leave A Reply

Your email address will not be published.

WhatsApp chat