தக்காளிக்கு பதிலாக தக்காளி பவுடர் பயன்படுத்தலாம்! வணிகர் சங்கத் தலைவர் மத்திய அரசுக்கு வேண்டுகோள்!!

0
36

தக்காளிக்கு பதிலாக தக்காளி பவுடர் பயன்படுத்தலாம்! வணிகர் சங்கத் தலைவர் மத்திய அரசுக்கு வேண்டுகோள்!!

 

தக்காளிப் பழங்களை பயன்படுத்துவதற்கு பதிலாக தக்காளி பொடியை பயன்படுத்தலாம் அதற்கு மத்திய அரசு அனுமதி தர வேண்டும் என்று வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் விக்கிரம ராஜா அவர்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

 

தக்காளி விலை தமிழகம் மட்டுமில்லாமல் இந்தியா முழுவதிலும் அதிகரித்துக் கொண்டு இருக்கின்றது. இந்தியாவில் ஒவ்வொரு மாநிலங்களிலும் குறைந்தபட்சம் தக்காளி கிலோ 100 ரூபாய்க்கும் அதிகமாகத் தான் விற்பனை செய்யப்படுகின்றது. தமிழகத்தில் சென்னையில் இன்று தக்காளி விலை கிலோவுக்கு 10 ரூபாய் அதிகரித்து 110 ரூபாயாக விற்பனை செய்யப்படுகின்றது.

 

தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் தக்காளி பழங்களின் தேவையை பூர்த்தி செய்ய தமிழக அரசு ரேஷன் கடைகள் மூலமாக தக்காளி விற்பனை செய்யும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. ஏற்கனவே முதல்கட்டமாக சென்னையில் 80+ நியாவிலைக் கடைகள் மூலமாக தக்காளி விற்பனையை அரசு நடைமுறைப்படுத்தியது. இதையடுத்து இன்று முதல் தமிழகத்தில் மேலும் 300 ரேஷன் கடைகள் மூலமாக தக்காளி விற்பனையை தமிழக அரசு செயல்படுத்தியுள்ளது.

 

இந்நிலையில் உயர்ந்து வரும் தக்காளி விலையை கட்டுப்படுத்த வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் விக்கிரம ராஜா அவர்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.

 

தக்காளி விலை விண்ணைத் தொட்டுள்ளதன் காரணமாக தக்காளிக்கு பதிலாக தக்காளி பவுடர் பயன்படுத்தலாம் என்று அவர் கூறியுள்ளார். அதாவது மிளாகய்க்கு மிளகாய் பொடி, மிளகுக்கு மிளகு பொடி, மல்லிக்கு மல்லிப் பொடி, பட்டை கிராம்புக்கு பட்டை கிராம்பு பொடி ஆகியவை இருப்பது போல தற்பொழுது தக்காளிக்கு தக்காளி பொடியை பயன்படுத்தலாம் என்று விக்கிரமராஜா அவர்கள் யோசனை வழங்கியுள்ளார்.

 

இது தொடர்பாக வணிகர்.சங்க பேரமைப்பின் தலைவர் விக்கிரம ராஜா அவர்கள் “ஒரு கிலோ தக்காளி பழம் 150 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றது. இதனால் தக்காளியை காயவைத்து அதை பொடியாக செய்து பின்னர் அந்த தக்காளி பொடியை குறைந்த விலைக்கு விற்பனை செய்யலாம். இதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்துள்ளார்.