நள்ளிரவு முதல் அமலுக்கு வந்த சுங்கச்சாவடி கட்டணம்! வாகன ஓட்டிகள் அவதி!

0
146
Toll booth fee effective from midnight! Motorists suffer!
Toll booth fee effective from midnight! Motorists suffer!

 நள்ளிரவு முதல் அமலுக்கு வந்த சுங்கச்சாவடி கட்டணம்! வாகன ஓட்டிகள் அவதி!

ஆண்டு தோறும் செப்டம்பர் மாதம் சுங்கசாவடி கட்டணம் உயர்த்தி வரப்படுகிறது . தமிழ்நாட்டில் உள்ள ஐம்பது சுங்கச்சாவடிகளில் 22 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் விக்கிரவாண்டி, உளுந்தூர் பேட்டை, சமயபுரம்,ஓமலூர், கரூர் உள்ளிட்ட  28 சுங்கச்சாவடிகளில் நள்ளிரவு முதல் கட்டணம் உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது.

சென்னை ,தூத்துக்குடி ,கன்னியாகுமரி,திருச்செந்தூர்,நெல்லை ,மதுரை  உள்ளிட்ட மாவட்டங்களுக்கு செல்லும் முக்கிய வாகனங்கள் தமிழ்நாட்டின் மைய பகுதியான சமயபுரம் சுங்கச்சாவடி வழியாக செல்ல இருப்பதால் அந்த சுங்கச்சாவடி முக்கிய இடமாக கருதப்டுகிறது.

அந்த வழியாக ஒரு நாளில்  பேருந்து ,கார் ,வேன் உள்ளிட்ட 22ஆயிரம் வாகனங்கள் கடந்து செல்கின்றது. ஒரு நாள் கார் ஒன்றுக்கு   45ல்லிருந்து  55 ஆகவும் ,மாதாந்தர கட்டணம் 1400ல்லிருந்து  1650 ரூபாய் ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.மேலும் குறைந்தபட்சம் ரூ.10 முதல் அதிகபட்சம் ரூ.120 வரை கட்டணம்  உயர்த்தப்பட்டுள்ளது. 15% வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால் மக்கள் கடும் அவதிக்காளாகியுள்ளனர்.

author avatar
Parthipan K