இன்று இவர்களுக்கு வெற்றி! இன்றைய ராசி பலன்கள்: 10-11-2020

0
78

நாள்: சார்வரி வருடம், ஐப்பசி 25 ஆம் நாள், செவ்வாய் கிழமை (10/11/2020)

விரதம்: தசமி அதிகாலை 00:47 முதல் இரவு 10:53 வரை

திதி: தசமி இரவு 10:53 வரை பின்பு ஏகாதசி

நட்சத்திரம்: மகம் அதிகாலை 04:04 வரை பின்பு பூரம்

சந்திராஷ்டமம்: அவிட்டம்

யோகம்: சித்தயோகம்

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

நல்ல நேரம்:
காலை: 07:45 – 08:45
மாலை: 04:45 – 05:45

தவிர்க்க வேண்டிய நேரம்:
இராகு: 03:00 – 04:30 PM
குளிகை: 12:00 – 01:30 PM
எமகண்டம்: 09:00 – 10:30 AM

வழிபாடு: அம்மனை வழிபடும் சுபம் உண்டாகும்

ராசி பலன்கள்:

மேஷம்:
மேஷ ராசிக்காரர்களே! எதிர்பார்த்த சுப செய்திகள் வந்து சேரும். வாரிசுகளின் மூலம் ஆதாயம் உண்டாகும். பேச்சு சாதுரியத்தின் மூலம் வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். உத்தியோகத்தில் சாதகமான சூழல் நிலவும்.

ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களே! பணியிடங்களில் சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். மனதில் புது விதமான சிந்தனைகள் தோன்றும். வெளியூர் பயணங்கள் மேற்கொள்வீர்கள். பகை உணர்வுகளை மறந்து நட்புடன் பழகுவது நன்மையளிக்கும்.

மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களே! உறவினர்களிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை காண்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். எதிர்பாராத மாற்றங்கள் உண்டாகலாம். முயற்சிக்கு ஏற்ற முன்னேற்றம் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களின் மூலம் பலன் கிடைக்கும்.

கடகம்:
கடக ராசிக்காரர்களே! உடன்பிறப்புகளின் மூலம் நன்மைகள் ஏற்படும். பொன், பொருள் வாங்குவது லாபம் காண்பீர்கள். வெளியூர் பயணங்கள் மேற்கொள்வீர்கள். புதுவிதமான அனுபவங்கள் கிடைக்கும். மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். உத்தியோகத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.

சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களே! எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். கண்பார்வை தொடர்பான பிரச்சனைகள் குறையும். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய புரிதல் தோன்றும். குழப்பமான சூழ்நிலைகள் தோன்றி மறையும்.

கன்னி:
கன்னி ராசிக்காரர்களே! மற்றவர்களுக்கு உதவி செய்து மகிழ்வீர்கள். வாக்குறுதிகள் கொடுக்கும் பொழுது நிதானம் வேண்டும். வேலைவாய்ப்பு தொடர்பான செயல்பாடுகளில் முன்னேற்றம் காண்பீர்கள். எதிர்பாராத அலைச்சல்கள் மூலம் உடல் சோர்வு ஏற்படும். புதுவிதமான பயணங்கள் மேற்கொள்வீர்கள்.

துலாம்:
துலாம் ராசிக்காரர்களே! பொறுமையுடன் செயல்பட்டால் எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும். கடன் பிரச்சனைகள் குறையும். உடன்பிறப்புகளின் ஆதரவு கிடைக்கும். பல போராட்டங்களுக்குப் பிறகு நினைத்தது நிறைவேறும். உணவு தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும்.

விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களே! வியாபாரத்தில் சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். நெருக்கமானவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். உத்தியோகத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும். கணவன் மனைவி இடையே உறவு மேம்படும். இழந்ததை மீட்க முயற்சி செய்வீர்கள்.

தனுசு:
தனுசு ராசிக்காரர்களே! பெற்றோர் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பொது சேவைகளில் ஈடுபட்டு புகழ் பெறுவீர்கள். அரசு தொடர்பான செயல்பாடுகளில் சாதகமான சூழல் நிலவும். புது விதமான அனுபவம் கிடைக்கும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். வாகனப் பராமரிப்புச் செலவுகள் ஏற்படலாம்.

மகரம்:
மகர ராசிக்காரர்களே! தொழில் தொடர்பாக எடுக்கும் முடிவுகளில் நிதானம் வேண்டும். வாரிசுகளின் மூலம் மனவருத்தங்கள் ஏற்படலாம். வியாபாரத்தில் கவனம் வேண்டும். உயரதிகாரிகளிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். எதிர்பார்த்த சில காரியங்கள் காலதாமதமாக முடியும். ஞாபகமறதி பிரச்சனை ஏற்படலாம்.

கும்பம்:
கும்ப ராசிக்காரர்களே! சொத்து வழக்கு தொடர்பான செயல்பாடுகளில் வெற்றி காண்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். கடன் பிரச்சனைகள் குறையும். பொருட்சேர்க்கை உண்டாகும். புதிய நம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள்.

மீனம்:
மீன ராசிக்காரர்களே! புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தொழிலில் கவனம் வேண்டும். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வெளியூர் பயணங்கள் மேற்கொள்வீர்கள்.

author avatar
Parthipan K