Connect with us

State

தமிழகத்தில் 6000த்தை நெருங்கும் கொரோனா பலி எண்ணிக்கை.. இன்றைய நிலவரம்!!

Published

on

உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதுவரை 2 கோடிக்கும் அதிகமானவர்கள் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 7 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் இந்த வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பார்ப்பவர்களின் எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அந்த வகையில் தமிழகத்தில் இன்று மட்டும் புதிதாக 5,890 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தமாக தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 3,43,945 ஆக உயர்ந்துள்ளது.

Advertisement

மேலும், இன்று தொற்று காரணமாக 120 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மொத்த பலி எண்ணிக்கை 5,886 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் இன்று மட்டும் 5,667 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினார் எண்ணிக்கை 2,83,937 ஆக உயர்ந்துள்ளது.

Advertisement