இங்கெல்லாம் இன்னைக்கு மழை வெளுத்து வாங்க போகுது! மக்களே உஷார்!

0
65

குமரி கடல் பகுதியில் உள்ளே வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி, மற்றும் தேனி, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை மற்றும் மிக கனமழை பெய்யலாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கின்றது.

திருப்பூர், திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், கன்னியாகுமரி, ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும் மற்ற மாவட்டங்களில் மற்றும் காரைக்கால் புதுவை ஆகிய பகுதிகளில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டு இருக்கிறது.

வரும் 48 மணி நேரத்தில் டெல்டா மாவட்டங்கள், கடலூர், காரைக்கால், மற்றும் நீலகிரி, தேனி, வெளியிடங்களில் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கணவரையும் மற்ற இடங்களில் பெரும்பாலான இடங்களில் லேசான முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது.

அடுத்த 72 மணி நேரத்தில் தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் அனேக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை ,மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் இருக்கும். ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கின்றது.

கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டத்தில் கோத்தகிரி 12 சென்டிமீட்டர், காமராஜர் எஸ்டேட் ஒன்பது சென்டி மீட்டர் மழையும், குன்னூர், திருச்சுழி, பரமக்குடி, ஆகிய இடங்களில் தலா ஏழு சென்டிமீட்டர் குறையும் செய்திருக்கின்றது.