வரும் இருபத்தி 26ம் தேதி தொடங்குகிறது வடகிழக்கு பருவமழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

0
59

தென்மேற்கு பருவமழை விலகி பெறும் 26 ஆம் தேதி வடகிழக்கு பருவமழை ஆரம்பமாக சாதகமான சூழ்நிலை இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது. இந்த வருடம் ஜூன் மாதம் 3ஆம் தேதியில் தென்மேற்கு பருவமழை ஆரம்பித்து நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.

இறுதியில் தமிழகம், கேரளா மற்றும் கர்நாடகா, உள்ளிட்ட மாநிலங்களிலும் வட கிழக்கு மாநிலங்களிலும் தென்மேற்கு பருவமழை மிகத்தீவிரமாக பெய்து வருகிறது . சென்ற இரண்டு வார காலமாக பெய்து வரும் கனமழை காரணமாக, தமிழ்நாட்டில் தென் மாவட்டங்கள், கேரளா மற்றும் வடக்கு மாவட்டங்களில் அணைகள் நிரம்பி பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு உண்டாகியிருக்கிறது.

இந்த சூழ்நிலையில், தென்மேற்கு பருவமழை வரும் 25ஆம் தேதி முடிவடைந்து விடும் சூழல் இருக்கிறது. ஆனாலும் இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் மண்டல தலைவர் பாலச்சந்திரன் வெளியிட்டு உள்ள அறிவிப்பு ஒன்றில் வங்கக் கடல் மற்றும் தென்னிந்திய பகுதிகளில் வளிமண்டல கீழ் அடுக்கில் எதிர்வரும் 26ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவக்காற்று பேசுவதற்கான சாதகமான சூழல் இருக்கிறது. இதன் காரணமாக, தென்மேற்கு பருவமழை இந்திய பகுதிகளில் இருந்து விலகி வடகிழக்கு பருவமழை வரும் 26-ஆம் தேதி தொடங்குவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது நேற்று காலை நிலவரத்தின் அடிப்படையில் தமிழகத்தில் அதிகபட்சமாக சோழவந்தான், சாத்தான்குளம், பென்னாகரம் உள்ளிட்ட பகுதிகளில் ஆறு சென்டி மீட்டர் மழை பதிவாகி இருக்கிறது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை எதுவும் இல்லை இன்றும், நாளையும் எங்கெங்கே மழை பெய்யும் என்று கவனித்தால், சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பின் அடிப்படையில், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, திருநெல்வேலி, திருப்பத்தூர், தென்காசி, திருச்சி, உட்பட 22 மாவட்டங்களில் இன்று முதல் மிக கனமழை வரையில் பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி இருக்கக்கூடிய மாவட்டங்களான கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், சேலம், நாமக்கல், ஈரோடு, உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. சென்னையில் லேசான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது.