தேமுதிக எடுத்த அதிரடி முடிவு! அதிர்ச்சியில் ஸ்டாலின்!

0
68

அடுத்த மாதம் ஆறாம் தேதி தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இதனை தொடர்ந்து எதிர்வரும் சட்டசபை தேர்தலில் திமுக சார்பாக போட்டியிட விருப்பம் உள்ளவர்களிடமிருந்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் சென்ற மாதம் 17ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரையில் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வந்தனர். இதுவரையில் 8 ஆயிரத்து 388 விருப்ப மனுக்கள் வினியோகம் செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இதிலே 1967 விருப்ப மனுக்கள் தாக்கல் ஆகி இருப்பதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், விருப்பமனு கொடுத்தவர்கள் இடம் திமுக சார்பாக இன்றிலிருந்து நேர்காணல் ஆரம்பமாகிறது. இந்த நேர்காணலை அந்த கட்சியின் தலைவர் ஸ்டாலின் மற்றும் பொதுச் செயலாளர் துரைமுருகன் பொருளாளர் டி ஆர் பாலு மற்றும் முதன்மைச் செயலாளர் கே என் நேரு போன்றோர் நடத்த இருப்பதாக தகவல்கள் கிடைத்து இருக்கிறது.

இது ஒருபுறமிருக்க தேமுதிக, அதிமுக கூட்டணியில் இருந்து விலகும் தருவாயில் இருக்கின்றது .அந்த கட்சியை எப்படியேனும் தன்னுடைய கூட்டணிக்குள் கொண்டு வந்துவிட வேண்டும் என்று திமுக தீவிரமாக முயற்சி மேற்கொண்டு வருகிறது. ஆனால் தேமுதிக கமலஹாசனின் மக்கள் நீதி மையம் கட்சியுடன் கூட்டணி சேர்வதற்காக காத்துக் கொண்டிருப்பதாக தெரிவிக்கிறார்கள்.

அதோடு மட்டும் நின்று விடாமல் திமுக மற்றும் மக்கள் நீதி மையம் கட்சிகளுக்கு இடையே ரகசிய பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருவதாக தெரிவிக்கிறார்கள். தேமுதிகவிற்கு தற்சமயம் வாக்கு வங்கி பெரிய ஆய்வில் இல்லை என்று சொன்னாலும் விஜயகாந்த் அவர்களின் முகத்தை வைத்து ஓட்டுக்களை வாங்குவதற்கு அந்த கட்சி திட்டமிட்டு இருக்கிறது. விஜயகாந்த் வந்து பிரச்சாரம் மேற்கொண்டாலே போதும் நாம் வெற்றிப்பெற்றுவிடலாம் என்று அந்தக் கட்சியின் தலைமை நினைக்கின்றது.

இதையெல்லாம் நன்கறிந்த ஸ்டாலின் அந்த வாய்ப்பை எதற்காக நாம் பயன்படுத்தக் கூடாது மக்களிடையே பரிட்சயமான ஒரு நல்ல தலைவர் விஜயகாந்த். அவர் வந்து ஓட்டு கேட்டால் நிச்சயமாக கணிசமான வாக்குகள் விழுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. அதனை கைநழுவி போக விடக்கூடாது என்று ஸ்டாலின் நினைப்பதாக சொல்கிறார்கள்.

அதேவேளையில், கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம் கட்சியுடன் கூட்டணியில் இணைவதற்கு தேமுதிக ஆர்வம் காட்டி வருவதால் திமுக சற்றே கலங்கிப் போய் இருப்பதாக சொல்கிறார்கள்.