இன்றைய ராசி பலன் 20-09-2020 Today Rasi Palan 20-09-2020

0
58

இன்றைய ராசி பலன்- 20-09-2020

நாள் : 20-09-2020

தமிழ் மாதம்: 

புரட்டாசி 04, ஞாயிற்றுக்கிழமை.

நல்ல நேரம்: 

காலை 7.45 மணி முதல் 8.45 மணி வரை, மாலை 3.15 மணி முதல் 4.15 மணி வரை.

இராகு காலம்: 

மாலை 4.30 முதல் 6.00 வரை.

எம கண்டம்: 

மதியம் 12.00 முதல் 1.30 வரை.

குளிகன்:

பிற்பகல் 3.00 முதல் 4.30 வரை,

திதி:

சதுர்த்தி திதி பின்இரவு 02.27 வரை பின்பு பஞ்சமி.

நட்சத்திரம்:

சுவாதி நட்சத்திரம் இரவு 10.51 வரை பின்பு விசாகம்.

சித்தயோகம் இரவு 10.51 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. மாத சதுர்த்தி. லக்ஷ்மி நரசிம்மர்- விநாயகர் வழிபாடு நல்லது.

மேஷம்

மேஷ ராசிக்காரர்களே இன்று எடுக்கும் காரியங்களில் எல்லாம் வெற்றி கிடைக்கும். உறவினர்கள் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி உண்டாகும். வீட்டு தேவைகள் அனைத்தும் பூர்த்தியா-கும். பெண்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்ல நேரிடும். புதிய பொருட்கள் சேரும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களே இன்றைய நாள் ஏற்றத்தைத் தரும். குடும்பத்தில் நிம்மதியும், மகிழ்ச்சியும் நிலைத்து இருக்க உங்களின் முன்கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. திருமணம் போன்ற சுப காரிய முயற்சிகளில் தாமத பலன் கிடைக்கும் என்றாலும் வெற்றி உண்டாகும். உற்றார் உறவினர்களின் ஆதரவு கிடைக்கும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களே இன்று உடன் பிறந்தவர்களால் வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. திருமண முயற்சிகளில் சில தடைகளுக்குப் பின் அனுகூலமான பலன்கள் கிட்டும். பழைய நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும்.

கடகம்

கடக ராசிக்காரர்களே இன்றைய நாள் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்த வேண்டிய நாளாக இருக்கும். உடல் சீதோஷன நிலையில் மாற்றம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு கூட்டாளிகளை அனுசரித்து செல்வதன் மூலம் முன்னேற்றம் காணலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக நண்பர்களின் ஆதரவு கிடைக்கும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே இன்று பிள்ளைகளால் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். குடும்பத்தில் செலவுகள் கட்டுக்கடங்கி இருக்கும். பெற்றோரிடம் இருந்த மனஸ்தாபங்கள் விலகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் தாமதமின்றி கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப்பலன் கிட்டும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களே இன்றைய நாள் உறவினர்களின் வருகையால் மனம் மகிழ கூடிய இனிய நாளாக அமைய இருக்கிறது. புதிய நபர்களை சந்திக்கக் கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில் வியாபார ரீதியான பண விஷயத்தில் சற்று எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியமாகும். பெண்கள் இறை வழிபாடுகளில் ஈடுபடுவார்கள்.

துலாம்

துலா ராசிக்காரர்களே இன்று பணவரவு தாராளமாக இருக்கும். நினைத்த காரியம் நிறைவேறும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய முயற்சிகளில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் விலகும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களே இன்றைய நாள் மனதில் நினைத்த காரியங்கள் கைகூடுவதற்கு சந்தர்ப்பங்கள் அமையும். தொழில் ரீதியான கொடுக்கல் வாங்கலில் சற்று எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. கடன் பிரச்சினைகள் படிப்படியாக குறையும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வதன் மூலம் பொருளாதாரப் பிரச்சினையை எளிதாக சமாளிப்பீர்கள்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களே இன்று இல்லம் தேடி இனிய செய்திகள் வந்து சேரும். சகோதர சகோதரிகளுடன் இருந்த மன சங்கடங்கள் விலகி ஒற்றுமை கூடும். பிள்ளைகளால் சுபசெலவுகள் உண்டாகும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கடன்கள் குறையும்.

மகரம்

மகர ராசிக்காரர்களே இன்றைய நாள் நினைத்ததெல்லாம் நடக்கும் நாளாக அமைய இருக்கிறது. எதிர்பாராத திடீர் தன வரவு திருப்தியை தரும். நிலுவையிலிருந்த பழைய பாக்கிகள் அனைத்தும் வசூலாகும். பொருளாதார ரீதியான முன்னேற்றம் சீராக இருக்கும். சுய தொழில் புரிபவர்களுக்கு லாபகரமான நாளாக அமையும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களே இன்று உங்கள் மனதிற்கு புது தெம்பு கிடைக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவால் எடுக்கும் முயற்சியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழில் தொடர்பாக நவீன கருவிகள் வாங்கும் எண்ணம் நிறைவேறும். சுப காரியங்கள் எளிதில் கைகூடும். எதிர்பாராத வகையில் வருமானம் பெருகும்.

மீனம்

மீன ராசிக்காரர்களே இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் அறிமுகம் இல்லாத நபர்களிடம் தேவையில்லாமல் பேசுவதை தவிர்ப்பது உத்தமம். வியாபாரத்தில் பெரிய தொகையை முதலீடு செய்யாமல் இருப்பது நல்லது. வாகனங்களில் செல்லும் போது எச்சரிக்கை வேண்டும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

 

 

 

 

author avatar
Kowsalya