9 மாவட்ட உள்ளாட்சி தேர்தல்! இன்று தொடங்குகிறது வேட்புமனு தாக்கல்!

0
87

கடந்த 2019ஆம் ஆண்டு தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெறவிருந்த உள்ளாட்சி தேர்தல் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. அதன்பின்னர் வெவ்வேறு காரணங்களை தெரிவித்து உள்ளாட்சி தேர்தல் தள்ளி வைக்கப்பட்டு கொண்டே வந்தது.இந்த நிலையில், கடந்த 2019ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் தமிழகத்தில் நடைபெற்றது. ஆனால் அப்போது புதிதாக தொடங்கப்பட்ட வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை , செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், நெல்லை, தென்காசி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் தள்ளி வைக்கப்பட்டு மற்ற மாவட்டங்களில் நடத்தப்பட்டது.

இந்த நிலையில், சமீபத்தில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கு ஒன்றில் விசாரணை மேற்கொண்ட உச்சநீதிமன்றம் செப்டம்பர் மாதம் 15ஆம் தேதிக்குள் இந்த ஒன்பது மாவட்ட உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் தேர்தல் பணிகள் நடந்து வந்தன இதற்கு இடையில் தேர்தல் ஆணையம் ஆறு மாத காலம் அவகாசம் கேட்டது.இந்த சூழ்நிலையில், தேர்தல் தள்ளி வைக்கப்பட்டு இருந்த 9 புதிய மாவட்டங்களில் இன்றைய தினம் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு வேட்புமனுத்தாக்கல் தொடங்க இருக்கிறது.

9 மாவட்டங்களில் ஊரக மற்றும் உள்ளாட்சி தேர்தல் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து தேர்தல் ஆணையம் அந்த பணிகளை மிகவும் சுறுசுறுப்பாக செய்து வந்தது. இதற்கு இடையில் 9 மாவட்டங்களுக்கான வாக்காளர் பட்டியல் விவரங்களை மாநிலத் தேர்தல் ஆணையம் சென்ற முப்பத்தி ஒன்றாம் தேதி வெளியிட்டது. அதோடு உள்ளாட்சித் தேர்தல் குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை செய்தது.

தமிழ்நாட்டில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதன் அடிப்படையில் அக்டோபர் மாதம் ஆறாம் தேதி மற்றும் அக்டோபர் மாதம் 9ம் தேதிகளில் இரண்டு கட்டமாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அதற்கான வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்கி வரும் 22ஆம் தேதி வரையில் நடைபெறும் என்று தெரிவிக்கப்படுகிறது. இருபத்தி மூன்றாம் தேதி அன்று வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படும். 25ஆம் தேதி அன்று வேட்புமனுவை திரும்பப் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. வேட்புமனுக்கள் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரையில் பெறப்படும் என தேர்தல் ஆணையம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.