இன்று உலக மனநல தினம்:!! மனம் நலம் சார்ந்த பிரச்சினைகளை சரி செய்வது எப்படி?

0
126

இன்று உலக மனநல தினம்:!! மனம் நலம் சார்ந்த பிரச்சினைகளை சரி செய்வது எப்படி?

இன்று உலக மன நல தினத்தை முன்னிட்டு,மனம் நலம் சார்ந்த விழிப்புணர்வு மற்றும் இந்த நாள் எதற்காக அனுசரிக்கப்படுகிறது இதன் முக்கியத்துவத்தை பற்றி நாம் தெரிந்து கொள்வது மிக அவசியமானதாகும்.

உலக மனம் நல தினம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 10ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.1992 ஆம் ஆண்டு உலக மனநல கூட்டமைப்பால் முதன் முதலில் இந்த தினம்,உலக மனநல தினமாக வரையறுக்கப்பட்டு அனுசரிக்கப்பட்டது.இந்த தினம் அனுசரிக்கப்படுவதற்கான முக்கிய காரணம் மன நலம் சார்ந்த பிரச்சினைகளுக்கு மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கிலும்,மனநல பிரச்சனைகளுக்கு ஆதரவாக முயற்சிகளை மேற்கொள்வதுமாகும்

அதாவது உலகில் எட்டில் ஒரு பங்கு மக்கள் மனம் நலம் சார்ந்த பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.

மற்ற ஆண்டுகளை விட இந்த ஆண்டில் இந்த மனநல தினத்திற்காக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதற்கான முதல் காரணம் கடந்த மூன்று,நான்கு ஆண்டுகளாக கொரோனாவின் தாக்கத்தின் காரணமாக பலரும் உளவியல் சார்ந்த பிரச்சினைகளை சந்திக்க நேரிட்டுள்ளது.

அதாவது கொரோனா நோயால் ஏற்பட்ட தனிமை,
வேலையின்மை, பண இழப்பீடு, உள்ளிட்ட தாக்கத்தினால் பலரும் மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளனர்.இந்த மன அழுத்தமானது நம் மூளையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

மன அழுத்தத்தினால் நாம் எதுபோன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்?

ஒருவரின் அதிகப்படியான மன அழுத்தம் கீழ்கண்ட தாக்கங்களை ஏற்படுத்தும்.

ஒரு வேலையில் கவனம் செலுத்த முடியாமல் தவிப்பது,

அடிக்கடி ஞாபகம் மறதியால் அவதிப்படுவது

பிடித்தவர்களிடம் மற்றும் குடும்பத்தினரிடம் காரணமே இன்றி கோவப்படுவது

இந்த மன அழுத்தத்தினால் நாம் நல்ல உறவுகளை கூட இழக்க நேரிடும்

சின்ன விஷயத்தை கூட பதற்றத்துடனும் பயத்தோடும் நாம் செய்ய தயங்குவது.

தேவையில்லாத எதிர்மறையான எண்ணங்களை எண்ணுவது

ஏன் இந்த மன அழுத்தம் சிலரை தற்கொலைக்கு கூட தூண்டி உள்ளது. இது போன்ற ஏராளமான மனரீதியான பிரச்சனைகளை நீங்கள் சந்திப்பீர்கள்.

இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு தான் என்ன?

இந்த மனநலம் சார்ந்த பிரச்சினைகளுக்கு மருந்தியல் ரீதியாகவும்,உளவியல் ரீதியாகவும் சிகிச்சை அளிக்கப்படும்.

மருத்துவரிடம் செல்லாமல் நமக்கு நாமே மனநல பிரச்சனையிலிருந்து விடுபட சில வழிகள்!

அதிகப்படியான மன அழுத்தத்தை உணரும்போது நமக்கு பிடித்தவரிடம் மனம் விட்டு பேசுவது.

அதிகப்படியான மன அழுத்தத்தை உணரும் பொழுது முதலில் நம் தனிமையை தவிர்த்து குடும்பத்தினரோடு அல்லது நண்பர்களோடு நேரத்தை செலவிடுவது மன அழுத்தத்தில் இருந்து நம்மை விடுவிக்கும்.

ஒரு குறிப்பிட்ட பிரச்சினையால் அதிகப்படியான மன அழுத்தத்தை சந்திக்கும்போது அந்தப் பிரச்சினையை விட்டுவிட்டு நமது சிந்தனையை வேறு இடத்தில் செலுத்துவது மன அழுத்தத்தில் இருந்து நம்மை விடுவிக்கும்.

கொரோனா,புற்றுநோய் நீரிளிவு நோய்,இதய நோய்களை போன்றே மன அழுத்தமும் ஓர் கொடிய நோயாகும்.

நம் குடும்பத்தினரோடும் நண்பர்களோடும் நேரத்தை செலவிட்டு மனம் விட்டு பேசி நம் மன அழுத்தத்திலிருந்து விலகி மகிழ்ச்சியான வாழ்வை வாழ்வதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.குறிப்பாக வாழ்வில் பணம் எவ்வளவு முக்கியமோ அதே விட மகிழ்ச்சியும் முக்கியம் என்பது அனைவரும் புரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும்.

author avatar
Pavithra

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here