சௌபாக்கியங்களும் தரும் புரட்டாசி சனிக்கிழமை!

0
177

புரட்டாசி மாதம் முழுவதும் விரதமிருந்து பெருமாளை வழிபட சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும்.

புரட்டாசி மாதத்தில்தான் எம்பெருமான் பெருமாள் பிறந்தார். எனவே, புரட்டாசி சனிக்கிழமை விரதம் இருப்பது பெருமாளுக்கு மகிழ்ச்சியைத் தரும், சனியின் பார்வையும் பலவீனமடையும்.

சனிக்கிழமை அன்று முழுவதும் உபவாசம் இருப்பது சிறப்பாகப் பேசப்படுகிறது.

கிரக தோஷமுள்ளவர்கள் புரட்டாசி சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயர் கோயிலுக்குச் சென்று வழிபட்டால் கருணை மிகுந்த ஆஞ்சநேயசாமி, சனியின் பிடியிலிருந்து காப்பாற்றுவார்.

ஆஞ்சநேயரை வணங்கும் பக்தர்களை சனிபகவான் தொந்தரவு செய்வதில்லை.

புரட்டாசி சனிக்கிழமைகளில் யாருக்கும் கடன் கொடுக்கவும் கூடாது.கடன் வாங்கவும் கூடாது.

சூரியனுக்கு உரிய பிரத்யதி தேவதை பசுபதி என்றழைக்கப்படும் சிவபெருமான். புதனுக்கு உரிய பிரத்யதி தேவதை நாராயணன். இவர்கள் இருவரும் தெய்வீக மூலையாக கருதப்படும் கன்னி மூலையில் இணைவது சங்கர நாராயணர் இணைவாகக் கருதப்படுகிறது.

குறையன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா!’ நீ கலிநாளுக்கிறங்கி கல்லிலே இறங்கி நிலையாகக் கோயிலில் திருமலையில் நிற்கின்றாய் என்று உணர்ந்து ‘மலையப்பா, மணிவண்ணா, கோவிந்தா, கோவிந்தா, கோபாலா’ என நெற்றியில் நாமாம் தரித்து பஜனை செய்து, வீடுகளில் பாத்திரத்தில், செம்பில், பிச்சை ஏற்று அதைச் சமைத்து விரதம் முடிப்பார்கள் பெருமாள் பக்தர்கள் சிலர். புண்ணியம் மிகுந்த புரட்டாசி மாதம் முழுவதும் பல விரதங்கள், வழிபாடுகள், பண்டிகைகள் கொண்டாடப்படுகிறது.

பெருமாள் துதி

“ஓம் ஹ்ராம் ஹ்ரீம் க்லீம்

ஓம் நமோ ஸ்ரீ வேங்கடேசாய நமஹ.”

இந்த மாதம் முழுவதும் பெருமாள் துதியை சொல்லி வந்தால், சனிபகவானின் கெடுபலன்களிலிருந்து விடுபடலாம்.

author avatar
Kowsalya