இன்று ஒரு நாள் பொது விடுமுறை அறிவித்த மாநிலம்! ஏன் தெரியுமா?

0
76

நாட்டின் 75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு அமுதப் பெருவிழாவாக நாடு முழுவதும் நேற்று உற்சாகத்துடனும், கோலாகலத்துடன் கொண்டாடப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட நாட்டு மக்கள் 13ம் தேதி முதல் தங்களுடைய வீடுகளில் தேசிய கொடியை ஏற்றி தங்களுடைய நாட்டுப்பற்றை வெளிப்படுத்தினர்.

இதே போல சென்னை ஜெயின் சார்ஜ் கோட்டை கொத்தளத்தில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கொடி ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இதனையடுத்து பல்வேறு துறைகளில் சாதனை படைத்த அதிகாரிகளுக்கு சிறப்பு விருதுகள், பரிசுகள், புத்தகங்கள், உள்ளிட்டவை வழங்கப்பட்டது.

பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் இருந்த புதுச்சேரி கடந்த 1962 ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் 16ஆம் தேதி இந்தியாவுடன் அதிகாரப்பூர்வமாக இணைக்கப்பட்டது. இந்த தினத்தை சட்டபூர்வமான பரிமாற்ற தினமாக புதுச்சேரி அரசு சார்பாக வருடம் தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், சட்டபூர்வ பரிமாற்ற தினத்தை முன்னிட்டு புதுச்சேரி மாநிலத்தில் இன்று பொது விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.