இன்று பள்ளி மற்றும் கல்லூரிகள் விடுமுறை! இந்த இரண்டு மாவட்டங்களுக்கு மட்டும் பொருந்தும்! 

0
132
Today is a school and college holiday! Applies to these two districts only!
Today is a school and college holiday! Applies to these two districts only!

இன்று பள்ளி மற்றும் கல்லூரிகள் விடுமுறை! இந்த இரண்டு மாவட்டங்களுக்கு மட்டும் பொருந்தும்!

கடந்த இரண்டு வாரங்களாகவே தமிழகத்தில் கனமழை முதல் மிதமான மழை வரை பெய்து வருகின்றது.கடந்த இரண்டு வாரங்ககளாக வங்கக்கடலில் உருவான  காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது.

குறிப்பாக மயிலாடுதுறை சீர்காழியில் 122 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு ஆறுமணி நேரத்தில் 42 செ.மீ அளவிற்கு மழை பெய்தது அதனால் அந்த பகுதியில் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்தது.

பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வந்ததால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டனர்.தற்போது தான் கனமழை குறைந்து பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் செயல்பட தொடங்கி உள்ளது.

ஆனால் தற்போது கேரள கடலோர பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு,புதுவை ,காரைக்கால் போன்ற பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளனர்.

நேற்று முதலே தேனி ,விருதுநகர் உள்ளிட்ட தென்மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது.அதனால் கனமழை காரணமாக விருதுநகர் மாவட்டத்தில் பள்ளி  மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் தேனி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

author avatar
Parthipan K