இன்றைய முக்கிய செய்திகள் 08.07.2020

0
95
  • 1.கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கான நடைமுறைகளை குறித்து விளக்கம் அளிக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு.

சென்னையை சேர்ந்த புகழ்பெற்ற நரம்பியல் மருத்துவர் சைமன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி உயிரிழந்தார். இதனையடுத்து அவரது உடல் டி.பி. சத்திரத்தில் உள்ள கல்லறையில் அடக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது. ஆனால் அங்குள்ள மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.மேலும் இதனையடுத்து வேலங்காடு கல்லறையில் அடக்கம் செய்ய வந்தவர்களையும், ஆம்புலன்ஸ் ஓட்டுநரையும் அங்குள்ள மக்கள் கல்லால் தாக்கினர்.

இந்நிலையில் இது தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தின் நடந்து வருகிறது. இதனையடுத்து கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கான நடைமுறைகள் என்ன என்பது குறித்து தமிழக அரசு நாளை மறுநாள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.

2.இலவச சிலிண்டர் வழங்கும் திட்டம் மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிப்பு

கொரோனா தொற்று காரணமாக ஏழை மக்களுக்கு மத்திய அரசின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் கடந்த மூன்று மாதங்களாக இலவச சிலிண்டர் வழங்கப்பட்டது. மேலும் தற்போது ஏழை மக்களுக்கு உதவும் வகையில் உஜ்வாலா திட்டத்தின் கீழ், இலவச சிலிண்டர் வழங்கும் திட்டத்தை மத்திய அரசு 3 மாதங்களுக்கு நீட்டித்துள்ளது.

மேலும் அவாஸ் யோஜன திட்டத்தின் கீழ் நகர்ப்புறங்களில் குடியேறிய ஏழைகளுக்கு உதவும் வகையில் வாடகை வீடுகள் கட்டப்பட உள்ளன. இதன்மூலம் புலம்பெயர்ந்த ஏழை மக்கள் பயன் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

3.விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது மத்திய அரசுக்கு முதல்வர் வலியுறுத்தல்.

மின்சார சட்டத் திருத்த மசோதாவை கொண்டு வரும் முனைப்பில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது.இந்த மசோதாவில் விவசாயிகளுக்கு மற்றும் எழைகளுக்கு வழங்கும் அன்றாட யூனிட் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படும் என்று மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது.இந்த மசோதா குறித்து அனைத்து மாநிலங்களிடையே கருத்து கேட்கப்பட்டது. அப்போது விவசாயம் மற்றும் ஏழைகளுக்கு இலவச மின்சாரத் திட்டத்தை ரத்து செய்யக்கூடாது என்று தமிழக முதல்வர் பிரதமருக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த நிலையில் டெல்லியில் இருந்து விமானம் மூலம் தமிழகத்திற்கு வந்த மத்திய உள்துறை இணை அமைச்சரிடமும் இந்த கோரிக்கையை இன்று முதல்வர் முன்வைத்தார்.

4.பட்டாசு ஆலையில் திடீர் வெடி விபத்து நொடிப்பொழுதில் கட்டிடம் தரைமட்டம்

விருதுநகர் மாவட்டம் ஆமத்தூர் அருகே நாட்டார் மங்கலம் பகுதியில் 78 அறைகளுடன் பட்டாசு தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது.அன்றாடப் பணியை போலவே நேற்று நூற்றுக்கணக்கான பணியாளர்கள் வேலை செய்து வந்தனர்.குறிப்பிட்ட ஒரு அறையில் ராமகுருநாதன் என்ற பணியாளர் மருந்துகளை கலக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது திடீரென உராய்வு ஏற்பட்டு வெடி விபத்து ஏற்பட்டு அந்த அறை முழுவதும் தரைமட்டமானது.இதில் ராமகுருநாதன் பலத்த படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

5.வாட்ஸ் அப் செயலியை ஃபேஸ்புக் மெசேஞ்சர் உடன் இணைக்கும் புதிய திட்டம்

கடந்த சில வருடங்களுக்கு முன்பு வாட்ஸ் அப் நிறுவனத்தை பேஸ்புக் வாங்கியது.சிறிது காலத்திற்குப் பின்பு வாட்ஸ்அப்-யை ஃபேஸ்புக் உடன் ஃபேஸ்புக் நிறுவனம் இணைத்தது.தற்போது வாட்ஸ் ஆப்பை ஃபேஸ்புக் மெசேஞ்சர் உடன் இணைக்கும் புதிய திட்டம் வெளியிடுவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

6.பசுவை பலாத்காரம் செய்த மனித மிருகம்

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் 50 வயதுடைய நபர் ஒருவர் பசுவை அதன் தொழுவத்தில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.இந்த மோசமான சம்பவத்தில் ஈடுபட்ட அந்த நபர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 377-வது பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.

7.காதல் என்ற பெயரில் கல்லூரி மாணவியிடம் ஆபாசமாக பேசிய சென்னை மாநகராட்சி என்ஜினீயர் சஸ்பெண்ட்.

சென்னை மாநகராட்சியில் அதிகாரிகளும் ,ஊழியர்களும் கல்லூரி மாணவ-மாணவிகளும் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த சூழலில் சென்னை மாநகராட்சி இன்ஜினியர் ஒருவர் தன்னோடு பணியில் ஈடுபட்ட கல்லூரி மாணவி ஒருவருக்கு அந்த மாணவியிடம் காதலை வெளிப்படுத்துவதாக வாட்ஸ் அப்பில் ஆபாசமாக பேசியுள்ளார்.

அந்த நபர் தொல்லை தாங்காமல் அந்தப் பெண் இதுகுறித்து சென்னை பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு துணை கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து அந்த என்ஜினீயர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மேலும் அவருக்கு திருமணம் ஆனதும் குறிப்பிடத்தக்கது.

author avatar
Pavithra