திருப்பதி எழுமலையான் கோவிலுக்கு  தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் கவனத்திற்கு? இங்கு இனி தங்கும் விடுதிகள் கிடையாது?

0
142
to-the-attention-of-devotees-who-come-to-visit-tirupati-egumalaiyan-temple-are-there-no-more-hostels-here
to-the-attention-of-devotees-who-come-to-visit-tirupati-egumalaiyan-temple-are-there-no-more-hostels-here

திருப்பதி எழுமலையான் கோவிலுக்கு  தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் கவனத்திற்கு? இங்கு இனி தங்கும் விடுதிகள் கிடையாது?

கொரோனா பரவல் காரணமாக கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. அதனை தொடர்ந்து 2022 ஆம் ஆண்டு தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். பக்தர்கள் அதிக அளவு சாமி தரிசனம் செய்யும் கோவில்களில் ஒன்றாக இருப்பது  திருப்பதி ஏழுமலையான் கோவில்.

இங்கு  தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில் கடந்த புரட்டாசி மாதம் முதலில் இருந்து அதிக கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. அதனால் மீண்டும் டைம் ஸ்டால் டோக்கன்  முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம்  யார் எந்த நாளில், எந்த நேரத்தில் சாமி  தரிசனம் செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டிருக்கும். அவ்வாறு பக்தர்கள் சாமி தரிசனம்  செய்ய வரும் பொழுது கூட்ட நெரிசலை தவிர்க்க முடியும் என தேவதானம் அறிவித்தது.

கடந்த முறை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் தங்கும் விடுதிகளின் கட்டணம் உயர்த்தப்பட்டது. இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் சார்பில் 1300 தங்கு விடுதிகளில் 7500 அறைகள் கட்டப்பட்டுள்ளது. திருமலையில் உள்ள கட்டிடங்கள் பெரும்பாலானவை 30 முதல் 60 ஆண்டுகள் பழமையானது அதன் காரணமாக கதவு, ஜன்னல்கள் உடைந்தும் மேற்கூரைகள் சேதமடைந்தும் மழைக்காலங்களில் தண்ணீர் அறைக்குள் வருகின்றது.

அதனால் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் வாடகைக்கு அறை எடுக்கும் பொழுது அதிக சிரமம் அடைகின்றனர். இதுகுறித்து பக்தர்கள் தேவஸ்தானத்தில் பல்வேறு புகார்களை கொடுத்துள்ளனர். அதனைத் தொடர்ந்து தேவஸ்தான அதிகாரிகள் பழைய கட்டிடங்களான கல்யாணி, சுதர்சனம், கோவர்தன் ஆகிய கட்டிடங்களை ஆய்வு செய்து 30 முதல் 60 ஆண்டுகள் பழமையான கட்டிடங்களை இடிக்க முடிவு செய்துள்ளனர். சுதர்சன சத்திரத்தில் 396 அறைகளும், கல்யாணி சத்திரத்தில் 260 அறைகளும், கோவர்தனில் 186 அறைகளும் என மொத்தம் 842 அறைகள் இடிக்கப்படவுள்ளது.

அந்த கட்டிடங்களுக்கு பதிலாக அதே இடத்தில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய கட்டிடங்கள் கட்டப்பட உள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் புதிய கட்டிடங்களின் அறைக்குள்ளையே குளியலறை, கழிவறை, கட்டில்கள், மேஜை, நாற்காலி வெண்ணீர் வசதியுடன் கட்டப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டிடங்களை இடிக்கும் பட்சத்தில் தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு அறைகள் பற்றாக்குறை ஏற்படும் என பக்தர்கள் கூறியுள்ளனர். இடிக்கப்பட உள்ள கட்டிடங்களுக்கு பதிலாக பக்தர்கள் பாதிக்காத வகையில் உடனடியாக புதிய கட்டிடங்களை கட்டி பக்தர்களின் பயன்பாட்டு கொண்டு வர வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர். மேலும் திருப்பதியில் நேற்று 58,494 பேர் தரிசனம் செய்துள்ளனர், 24 ஆயிரத்து 25 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர், ரூ 3.19 கோடி உண்டியல் காணிக்கை வசூலாகியுள்ளது.

author avatar
Parthipan K