முழங்கால் வலிக்கு முற்றுப்புள்ளி வைக்க!! இந்த ஒரு ஸ்பூன் பவுடர் போதும்!!

0
147
#image_title

முழங்கால் வலிக்கு முற்றுப்புள்ளி வைக்க!! இந்த ஒரு ஸ்பூன் பவுடர் போதும்!!

35 முதல் 40 வயதை கடந்து விட்டாலே அனைவருக்கும் முழங்கால் மூட்டு வலி நரம்பு பிரச்சனை என ஆரம்பித்து அனைத்தும் வந்துவிடுகிறது இதற்கு மூலதன காரணம் என்னவென்றால் நாம் மேற்கொள்ளும் உணவு பழக்க வழக்கம் தான்.

முந்தைய காலத்தைப் போல் தற்போது உள்ள இளைஞர்கள் என தொடங்கி அனைவரும் சத்தான ஆகாரத்தை உண்பதில்லை என்பதை இதன் நிசதமான உண்மை. அவ்வாறு 45 வயதிற்கும் மேற்பட்டவர்களுக்கு ஏற்படும் கை கால் மூட்டு வலி மற்றும் தசை பிடிப்பு நரம்பு இழுத்தல் என அனைத்து பிரச்சனைகளுக்கும் இந்த குறிப்பில் வருவது தீர்வாக அமையும்.

தேவையான பொருட்கள்:

புல் மக்கானா அரை கப்

சோம்பு 4 டீஸ்பூன்

மிளகு கால் டீஸ்பூன்

கற்கண்டு

 

இந்த மக்கானா என்பது தாமரை விதைகள் தான்.இதில் அதிகளவு கால்சியம் சத்து உள்ளதால் நமது எலும்புகளுக்கு மிகவும் நல்லது. இது நமது எலும்பு சம்பந்தமான பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வை கொடுக்கும்.

குறிப்பு( சர்க்கரை நோய் உள்ளவர்கள் கற்கண்டு சேர்த்துக் கொள்வதை தவிர்க்கவும்)

செய்முறை:

நாம் எடுத்து வைத்துள்ள பொருட்கள் அனைத்தையும் மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான பாலில் நாம் அரைத்து வைத்துள்ள பவுடரில் இருந்து ஒரு டேபிள் ஸ்பூன் கலந்து கொள்ள வேண்டும். தினம்தோறும் காலை மாலை என எந்த நேரத்திலும் இதனைக் குடித்து வரலாம். இது அனைத்தும் நமது எலும்புகளுக்கு நல்ல பலத்தை அளிக்கும். இது கோடை காலம் என்பதால் வாரத்தில் நான்கு முறை இதனை எடுத்துக் கொண்டால் போதுமானது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் எடுத்துக் கொள்ளலாம்.