சர்க்கரை நோயை எளிதில் கட்டுக்குள் கொண்டு வர! பப்பாளிக்காய் இருந்தால் போதும்!

0
144
#image_title

சர்க்கரை நோயை எளிதில் கட்டுக்குள் கொண்டு வர! பப்பாளிக்காய் இருந்தால் போதும்!

தற்போது உள்ள காலகட்டத்தில் பலரும் இந்த சர்க்கரை நோயால் அவதிப்படுகின்றனர். மருந்துகள் இல்லாமல் இந்த சர்க்கரை நோயை எவ்வாறு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும் என்பதனை இந்த பதிவின் மூலம் காணலாம்.

சர்க்கரை நோயாளிகள் மருந்துகள் இல்லாமல் எளிதில் சர்க்கரை நோயை கட்டுப்படுத்த முடியும். உணவு பழக்கம் வழக்க முறையின் மூலம் நாம் எளிதில் கட்டுப்படுத்தலாம். சர்க்கரை நோயை கட்டுப்படுத்தக் கூடிய உறுப்புகள் நம் உடலில் நான்கு உள்ளது. முதலில் கணையம், கல்லீரல், மண்ணீரல், சிறுநீரகம் ,கிட்னி .நாம் எடுத்துக் கொள்ள கூடிய உணவு சார்ந்த பொருட்கள் அதிகமான அடர்த்தியுள்ள மாவு சத்துள்ள உணவுகளை எடுத்துக் கொள்ளும் பொழுது இந்த நான்கு உறுப்புகளும் நன்றாக இயங்குவதில்லை.

மேலும் நம் வயிறு மற்றும் குடல் சார்ந்த பகுதிகள் எந்த அளவிற்கு நம் ஜீரண மண்டலம் நல்ல முறையில் இயங்குகிறதோ அந்த அளவிற்கு சர்க்கரை கட்டுப்பாட்டிற்குள் இருக்கும். நாம் எடுத்துக்க கூடிய உணவு முழுமையாக உறிஞ்சப்பட வேண்டும். அதில் இருக்கக்கூடிய சத்துகள் நல்ல முறையில் நம் உடலுக்கு சென்றடைய வேண்டும். பிறகு நன்றாக வெளியேற்றப்பட வேண்டும். இந்த முறைகள் நம் ஜீரண மண்டலத்தில் தான் நடக்கிறது. சர்க்கரை நோயாளிகள் உணவில் அதிகப்படியான காரத்தன்மை வாய்ந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். முக்கியமாக நீர் காய்கறிகளான முருங்கைக்கீரை, முருங்கைக்காய், வாழைத்தண்டு, வாழைப்பூ, கத்தரிக்காய் ,சுண்டைக்காய், போன்ற உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

யாருக்கும் தெரியாத சர்க்கரை நோயாளிகளுக்கு ஜீரண மண்டலத்தை சரியாக கூடிய காய் எதுவென்றால் பப்பாளிக்காய். இந்த பப்பாளிக்காயை கூட்டு அல்லது பொறியலாகவும் பயன்படுத்தலாம். இதில் இருக்கக்கூடிய என்சைம் சீரான மண்டலத்தை சீர்படுத்துகிறது. பப்பாளி காயில் இருக்கக்கூடிய வைட்டமின் சத்துக்கள் ஆன வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் டி ,வைட்டமின் ஈ, போன்ற அதிகப்படியான வைட்டமின் சத்துக்கள் நிறைந்துள்ளது.

இதில் அதிகப்படியான இரும்புச்சத்தும் உள்ளது. உங்களுக்கு இருக்கக்கூடிய ஹார்மோன் பிரச்சனைகளை சரி செய்யக்கூடிய தன்மையும் இதில் உள்ளது. தைராய்டு சம்பந்தமான பிரச்சினைகளையும் குணமாக்க கூடிய தன்மை பப்பாளிக்காய்க்கு இருக்கிறது. எலும்புகள் வலுவில்லாமல் இருப்பதனால் சர்க்கரை நோயாளிகள் ஏராளமான பிரச்சனைகளால் அவதிப்படுகின்றனர். நரம்பு மண்டலத்தை வலுப்படுத்தக்கூடிய தன்மையும் இந்த பப்பாளிக்காயில் இருக்கிறது. ஆகையால் சர்க்கரை நோயாளிகள் இந்த பப்பாளிக்காயை சமைத்து சாப்பிட்டு வர சர்க்கரை நோயை கட்டுப்படுத்த முடியும்.

author avatar
Parthipan K