தமிழக இளைஞர்களே! டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுத விரும்புகிறீர்களா? இதோ 5 முக்கிய தகவல்கள்!

0
73

2022 ஆம் ஆண்டிற்கான டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 , குரூப் 2 ஏ ,தேர்வுகளுக்கான தேதிகளை அறிவித்திருக்கிறது. இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் சென்னையில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்ததாவது, குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ பணிகளுக்கான போட்டித் தேர்வு அறிவிப்பு எதிர்வரும் 23ஆம் தேதி வெளியாவதாக தெரிவித்திருக்கிறார்.

இந்த தகவல் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியாகும் என்றும், குரூப்-2 நிலையில் 116 பணியிடங்களுக்கும், குரூப்-2 ஏ நிலையில் 5413 பணியிடங்களுக்கும், தேர்வு நடைபெறும் என்றும், தேர்வு எழுத விருப்பமுள்ளோர் பிப்ரவரி 23ஆம் தேதி முதல் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

வரும் மே மாதம் 21ம் தேதியில் குரூப் 2 குரூப் 2a போட்டித் தேர்வு நடைபெறும் இந்த தேர்வு முடிவுகள் ஜூன் மாதம் வெளியிடப்படும். குரூப்-2 தேர்வு 3 கட்டமாக நடைபேராயிருக்கிறது. மொத்தமாக 5413 பணியிடங்களுக்கு நடைபெறும் தேர்வுக்கான முடிவுகள் ஜூன் மாதம் வெளியிடப்படும் டிசம்பர் மற்றும் ஜனவரி கலந்தாய்வு நடைபெறும் என்று தெரிவித்திருக்கிறார்.

டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் இதுவரையில் காலை 10 மணியளவிலும் மதியம் 1மணியளவிலும், ஆரம்பித்து நடைபெற்று வந்த சூழ்நிலையில், இனி காலை 9 30 மணி முதல் மதியம் 12:30 மணி வரையில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அரசு துறைகள் மாநில பொதுத்துறை நிறுவனங்களில் இருக்கின்ற பணியிடங்களில் 100% தமிழக இளைஞர்களை நியமனம் செய்ய ஏதுவாக அனைத்து விதமான போட்டித் தேர்வுகளிலும் தமிழ்மொழித் தாள் தகுதித் தேர்வாக நடத்தப்படும் என்று சமீபத்தில் அரசாணை வெளியிடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது .

அதனடிப்படையில், குரூப் 2 தேர்வில் 200 கேள்விகளுக்கு 300 மதிப்பெண்கள் எனவும், 200 கேள்விகளில் 100 கேள்விகள் தாய்மொழி தகுதி தேர்வாக இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழ்மொழி கேள்விகளுடன் பொது அறிவியல் பாடத்தில் 75 மதிப்பெண்களும் நுண்ணறிவு தொடர்பாக 25 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

காலிப்பணியிடங்கள்:5413+116
தேர்வு தேதி:மே-21
விண்ணப்ப தேதி-பிப்-23
தேர்வு முடிவுகள்: ஜுன்
கலந்தாய்வு: டிசம்பர் 2022- ஜன 2023