அரசியல் கட்சிகளே வெற்றி பெறாத ஒரே பேரூராட்சி! கடும் அதிர்ச்சியில் ஆளும் தரப்பு!

0
74

தூத்துக்குடி மாவட்டத்தை பொருத்தவரையில் தற்போது திமுக அசுர பலத்துடன் இருந்து வருகிறது. அதாவது தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக திமுகவின் மகளிரணி தலைவர் கனிமொழி இருந்து வருகிறார்.

அதோடு தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் எதிர்க்கட்சியான அதிமுகவின் இமேஜ் மிகவும் டேமேஜாக இருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது.

இந்த நிலையில், அரசியல் கட்சிகளால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திருச்செந்தூர் நகராட்சியை தற்சமயம் ஆளுங்கட்சியான திமுக கைப்பற்றியிருக்கிறது.

அதேபோல திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு பேரூராட்சி ஆளுங்கட்சியான திமுக வசம் சென்று விட்டது. மொத்தமுள்ள 15 வார்டுகளில் 12 வார்டுகளில் ஆளும் கட்சியான திமுக வெற்றி பெற்றிருக்கிறது. மீதமிருக்கின்ற 3 வார்டுகளில் காங்கிரஸ், பாஜக மற்றும் அதிமுகவை சேர்ந்த வேட்பாளர்கள் தலா ஒரு இடத்தில் வெற்றி பெற்றிருக்கிறார்கள் என தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் திண்டுக்கல் மாவட்டம் பண்ணைக்காடு பேரூராட்சியையும் திமுக தன்வசம் இழுத்து விட்டது. மொத்தமுள்ள 15 வார்டுகளில் 10 வார்டுகளில் திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள். மீதமுள்ள 5 வார்டுகளில் அதிமுக வேட்பாளர்கள் 4 பேரும், காங்கிரஸ் கட்சியை சார்ந்த 1 வேட்பாளரும் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

திருநெல்வேலி சங்கர் நகர் பேரூராட்சி திமுக வசம் சென்றுவிட்டது. சங்கர்நகர் பேரூராட்சியில் மொத்தமுள்ள 12 வார்டுகளில் திமுக 10 வார்டுகளில் வெற்றி பெற்றிருக்கிறது. அதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. அதே நேரம் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் 1 வார்டில் வெற்றி பெற்றிருக்கிறது.

முன்னதாக ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பேரூராட்சியில் அனைத்து அரசியல் கட்சிகளையும் தோற்கடித்து 15 பகுதிகளிலும் சுயேச்சைகள் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.